web log free
May 09, 2025
kumar

kumar

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான சலிது மல்ஷிகாவின் முதன்மை கூட்டாளியாக அடையாளம் காணப்பட்ட 'பியுமா' என அழைக்கப்படும் பியும் ஹஸ்திகா டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து போதைப்பொருள் வலையமைப்பை 'பியுமா' கண்காணித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) விசேட குழுவொன்று அவரை டுபாயில் வைத்து கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.

வாழும் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

நாளை (16) அனைத்து ஆளுநர்களையும் சந்தித்து இந்த முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இனிமேல் உயிருடன் இருக்கும் எந்த ஒருவரின் பெயரையும் பாடசாலைகளுக்கு பெயர் வைக்க பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை பழைய மாணவர் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் உயிருடன் இருக்கும் போதே பாடசாலைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, உதவி வழங்குகிறோம் என்ற போர்வையில் அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குச் சென்று அரசியல் பேச்சுக்களை நடத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரேம்ஜயந்த தெரிவித்தார்

இன்று (15) அனுசரிக்கப்படும் சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

அங்கு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுராஜ் பெரேரா, 2021ஆம் ஆண்டில் 578 ஆண் குழந்தைகளும் 454 பெண் குழந்தைகளும் புற்றுநோய்க்கு ஆளானதாக பதிவாகியுள்ளதென தெரிவித்தார்.

அத்துடன், வருடாந்தம் 250-300 புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம அபேஷா வைத்தியசாலையின் குழந்தைப் புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சஞ்சீவ குணசேகர தெரிவித்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இரத்தப் புற்றுநோயானது சிறுவர்களிடையே மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புகைபிடித்தல் மற்றும் வெற்றிலை சாப்பிடுவதே பெரியவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் என்றும், ஆனால் குழந்தை பருவ புற்றுநோய்க்கு இதுபோன்ற குறிப்பிட்ட காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், வருடத்திற்கு 1,000 முதல் 1,200 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் புதிய கூட்டணியில் இணைய தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு ஹைட் சதுக்கத்தில் நடைபெறவுள்ள புதிய கூட்டணியின் இரண்டாவது பொதுக்கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக இணையவுள்ளதாக இடதுசாரி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதுடன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் மக்களின் நன்மதிப்பை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதும் விசேட அம்சமாகும்.

இவர்களுக்குப் பின்னால் உள்ள மேலும் பல பிராந்திய அரசியல் தலைவர்களும் எதிர்காலத்தில் புதிய கூட்டணியில் இணையப் போகிறார்கள் என்பதையும் மேற்கண்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஜே.வி.பி.யின் தலைவர் அனுர திஸாநாயக்க எதிர்வரும் தேர்தல் பிரசாரத்திற்காக இந்தியாவில் இருந்து முந்நூறு மில்லியனுக்கும் அதிகமான ரூபாவை பெற்றதா என்பது தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுர திஸாநாயக்க பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என கலாநிதி வலவ ஹங்குன்வேவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த பணம் ஜனதா விமுக்தி பெரமுனவினால் பெறப்பட்டதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்றார். 

 

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான மதிப்பிடப்பட்ட வரவு செலவுத் திட்டம் சுமார் 9,750,000,000 ரூபா என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 2023 இல் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் 2024 பட்ஜெட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்டது.

“பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் இதேபோன்ற வரவு செலவுத் திட்டம் தேவைப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

 

எவ்வாறாயினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வருடம் கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அவர் உறுதிப்படுத்தினார். "ஆனால் இரண்டு தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.

சாலியவெவ 15ஆம் கட்டை பகுதியில் கை உழவு இயந்திரத்துடன் சொகுசு ஜீப் மோதியதில் உழவு இயந்திரத்தின் சாரதி காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தில் எம்.பி.க்கு காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சாரதியுடன் தனது வாகனத்தில் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை 1.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப், அவருக்கு முன்னால் பயணித்த கை உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் சொகுசு ஜீப் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை இலக்கு வைத்து போதைப்பொருள் நடத்துபவர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக்கும்  நபர்கள் குறித்து விசாரணை செய்யுமாறு மாளிகாகந்த பிரதான நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.

போதைப்பொருளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் “மாவா” என்ற போதைப்பொருளே பாடசாலை மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் முதல் படியாக இருப்பதால் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய விசாரணைகளை நடத்துமாறும் நீதவான் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, அபின் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் "மாவா" என்ற போதைப்பொருளுக்கு பாடசாலை மாணவர்கள் அதிகளவு அடிமையாகி அதனை மிகக்குறைந்த விலைக்கு மாணவர்களுக்கு வழங்கி, பின்னர் போதைப்பொருளை உட்கொள்வதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் கிராமம் தோறும் சென்று கட்சியை மேம்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த வருடம் தேர்தல் வருடம் எனவும் அதனை புரிந்து கொண்டு கட்சியினருடன் சமாளித்துக்கொள்ளுங்கள் எனவும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் குழுவொன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் மாதங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிக் குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Shell-RM Parks Company மற்றும் Ceylon Petroleum Storage Terminal Company ஆகியவை பெட்ரோலிய சேமிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. 

இந்த ஒப்பந்தம் இன்று (12) கொலன்னாவையில் உள்ள லங்கா பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

அதன்படி, நாட்டில் உள்ள இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனம் மற்றும் ஷெல்-ஆர்எம் பார்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் இருப்புக்களை சேமித்து வைப்பது மற்றும் விநியோகித்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

கடந்த ஜூலை மாதம் 08 ஆம் திகதி இது தொடர்பான முன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd