முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் மூலம் உர மானியம் 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகின்றார்.
அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தாம் சமர்ப்பித்துள்ளதாகவும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் வழங்குவதற்கு தேவையான பணத்தை அரசாங்கமே ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம உடல்நலக் குறைவால் காலமானார்.
இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி விகிதங்கள், நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவை தற்போதைய நிலையிலேயே பராமரிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அவை முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் பதவியில் இருந்த கே.ரி. குருசாமி, கட்சி தலைவர் மனோ கணேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து சுயவிருப்புடன் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கொழும்பில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு, இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, காலியான பொது செயலாளர் பதவிக்கு முருகேசு பரணிதரனை ஏகமனதாக நியமித்தது.
முருகேசு பரணிதரன் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் மற்றும் பிரச்சார செயலாளர் ஆகிய பதவிகளை வகிக்கும் அதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணியினதும், தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் அரசியல் குழு உறுப்பினராகவும் பதவி வகின்றார்.
மேலும் அரசியல் குழுவில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில், ஞாயிற்றுகிழமை 29ம் திகதி கொழும்பில் நடைபெற உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழுவில் கலந்து பேசி அங்கே எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைய செயற்படுவது எனவும் தீர்மானிக்கபட்டது.
தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலை நடத்துவதற்காக திறைசேரியில் இருந்து 11 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலை நவ., 14ஆம் திகதி நடத்துவதாக அறிவித்தார்.
தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க தெரிவித்ததாவது, தேர்தலை நடத்துவது தொடர்பான செலவினங்களை ஈடுசெய்வதற்காக தனது அலுவலகம் 11 பில்லியன் ரூபாவை கோரியதாக தெரிவித்தார். ஜனாதிபதி திறைசேரியில் இருந்து நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கு அதிகாரம் பெற்றுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியது.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவே விரும்பவில்லை எனவும், அடிமட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை வெற்றி கொள்ளச் செய்யும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்தி வருவதாகவும் சமகி ஜன பலவேகவின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ இருக்கும் பக்கம் தோல்வி என்று கூறுவது நயவஞ்சகர்கள் மற்றும் மனநோயாளிகளின் கூற்று எனவும் அவர்களை அங்கொடைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவராலும் எப்போதும் வெற்றிபெற முடியாது எனவும், 60 வருடங்களாக அநுர திஸாநாயக்க தரப்பினர் தோல்வியடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
24.09.2024 திகதியிடப்பட்ட 2403/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் நவம்பர் 14ம் திகதி 10வது பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக தான் போட்டியிட உள்ளதாக, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த ஒரு கூட்டணிக்கும் வாய்ப்பு இல்லை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இலங்கையின் இடைக்கால பிரதமராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வரப் போவதில்லை என்றும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன உறுதி செய்துள்ளார்.