web log free
January 28, 2023
kumar

kumar

இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மின்சார கட்டணங்களை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏசியன் மிரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 6.50% மற்றும் 7.50% என 100 அடிப்படை புள்ளிகளாக அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

நீர் முகாமைத்துவ அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் ஏனைய அரசாங்கக் கட்சிகள் நடத்திய மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்த மூன்று அமைச்சரவை அமைச்சர்களில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

மேடையில் இருந்த வாசுதேவ நாணயக்கார மாத்திரம் இன்னும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை.

தனது அமைச்சுப் பதவியை பறித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தேசிய சுதந்திர முன்னணியின்  தலைவர் விமல் வீரவன்ச நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கடிதத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ள விமல் வீரவன்ச நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். 

விமல் வீரவன்சவின் அமைச்சு எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

விமல் வீரவன்ச வகித்து வந்த கைத்தொழில் அமைச்சர் பதவி, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதய கம்மன்பில வகித்து வந்த மின்சக்தி அமைச்சர் பதவி, எரிசக்தி அமைச்சராக பதவி வகித்த காமினி லொக்குகேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரின் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு கல்வி அமைச்சர் பதவியும், திலும் அமுனுகமவுக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியும், பவித்ரா வன்னியாராச்சிக்கு எரிசக்தி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அமைச்சரவையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இதுதொடர்பாக நடவடிக்கை ஜனாதிபதி செயலகத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் சற்று நேரத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு குறித்த தகவல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம்(05), 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை மறுதினம்(05) சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(06) முற்பகல் 10 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை (NWS&DB) தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், கொழும்பு 07, 08, 10, 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 02, 03 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர் வெள்ளை சுப்பையா.

சிவாஜி, எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக சினிமா வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டியில் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று அவர் காலமானார். அவருடைய மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்

நேற்று  11 சிறிய அரசாங்கக் கட்சிகள் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரு உறுப்பினர்கள் தொடர்பில் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

“முழு நாடும் சரியான பாதையில்” என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும், இந்த நிகழ்வில் வெளியிடப்பட்ட சில கருத்துக்களை அங்கீகரிக்க முடியாது எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அரசாங்கத்தை விமர்சித்து இவ்வாறான கருத்துக்களை வெளியிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டமை தொடர்பில் கட்சியின் ஒழுக்காற்று குழுவில் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த ஆகியோர் கலந்து கொண்டனர்

அரசாங்கத்தில் மக்கள் பிரச்சினை பேச களம் இல்லாததால் 11 அரசாங்கக் கட்சிகள் தனித்தனி மேடையில் நாட்டின் மற்றும் மக்களின் பிரச்சினைகளை பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.

11 அரசாங்கக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 உறுப்பினர்களை அரசாங்கம் தனித்தனி மேடையில் நிறுத்துவது நல்ல விடயமல்ல எனவும், தன்னை இங்கு மேடை ஏற்ற அரசாங்கமே பொறுப்பு எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் நெகிழ்வாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்த சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவோ சந்தர்ப்பமாக அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 11 அரசாங்க பங்காளிகள் இணைந்து தயாரித்த ‘முழு நாடும் சரியான பாதையில்’ என்ற தேசிய விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன்-1” வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இதனுடன் இப்படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.