web log free
June 13, 2024
kumar

kumar

மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல தொழிலதிபர் திரு.தினேஷ் ஷாப்டர் தனது கடைசி உயிலை எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கடைசி உயில் அவர் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுதப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடைசி உயிலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அவருடைய சொத்தில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கடைசி உயிலின் விவரங்கள் தற்போது காவல்துறை வசம் உள்ளதால், மரணம் தொடர்பான விசாரணைகள் புதிய திசையில் சென்றுள்ளன.

மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு புதிய வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஐக்கிய தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அநியாயமான வரி விதிப்பை இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கு செவிசாய்க்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான எம்.எம்.முஹம்மட்டை தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முன்னதாக கொலை மிரட்டல் வந்த எஸ்.பி. திவரத்னவுக்கு மீண்டும் ஒருமுறை குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட  உறுப்பினர்களான பத்திரன மற்றும் திவரத்ன ஆகியோருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.பி. .திவரத்ன மற்றும் பத்திரனவிற்கு18ஆம் திகதி தனது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

மக்கள் பரம்பரையாக வசித்து வந்த கிராமங்களுக்கு அப்பால்  அவற்றிற்குத் தொலைவில் அவர்கள் செய்கை பண்ணிய காணிகளும் உரியவர்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மன்னார், சிலாவத்துறையில் கடற்படை முகாம் அமைந்துள்ள பிரதேசமும் விடுவிக்கப்பட்டு சொந்தக்கார்களிடம்  மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
சர்வகட்சிக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் வியாழக்கிழமை (26) மாலை நடைபெற்றபோதே அவர் இதனைத் கூறியுள்ளார்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
ஜனாதிபதி அவர்களே, நாட்டில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள், 1985ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைப்படத்திற்கு ஏற்ப கிராமங்களின் அமைவிடங்கள்  கண்டறியப்பட்டு அவை ஏதாவதொரு காரணத்தினால் மக்களிடமிருந்து பறிபோயிருந்தால் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைப்பதாக இங்கு கூறினீர்கள். 
 
முஸ்லிம்களைப் பொறுத்தவரை வட கிழக்கில் அவர்கள் வசித்து வந்த கிராமங்களுக்கு அப்பால் தொலைவில் நிலங்களை சிரமப்பட்டு துப்புரவு செய்து நீண்ட காலமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்தனர். நாடு சுதந்திரமடைவதற்கு முன்னர் இருந்தே இவ்வாறான காணிகளில் அவர்கள் பயிர்ச்செய்கை, விவசாயம் செய்து வந்துள்ள நிலையில் அவற்றின் உறுதிப்பத்திரம் அல்லது அனுமதிப்பத்திரம் ஆகியவற்றையும் வைத்திருக்கின்றனர். 
 
அவ்வாறிருக்கத்தக்கதாக , 2005 – 2006 ஆண்டு காலப்பகுதியில் அவ்வாறான பல்லாயிரம் ஏக்கர் காணிகள் வனபரிபாலனத்திணைக்களம், வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் போன்றவற்றால் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவற்றிற்கு உரித்தானவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதர்கள் மண்டி பற்றைக்காடுகளாகவும் அவை காணப்டுகின்றன. அவை சிறிய காடுகளாக மாறியுள்ளன. கமநல சேவைத் திணைக்களமும் இதனோடு சம்பந்தப்படுள்ளது.
 
அக்காணிகளைப் பயன்படுத்தி அவற்றில் நீண்டகாலமாக செய்கை பண்ணிவந்தவர்கள் அவற்றில் பிரவேசிப்பதற்கு தடுக்கப்பட்டு வருகின்றனர்.
 
அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்அவற்றை உரிய மக்களுக்கு மீளக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பல வருடங்களாக இந்த விடயத்தை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். அந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
 
சிலாவத்துறை ஆக்கிரமிப்பு
 
மன்னார் மாவட்டத்தில் , சிலாவத்துறையில் பொது மக்களுக்கு சொந்தமான பெருமளவு காணிகள் நீண்டகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டு அந்தப் பிரதேசத்தில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சிலாவத்துறை கடை வீதி உட்பட பெரும்பாலான நிலப்பரப்பு அதற்காகக் கபளிகரம் செய்யப்பட்டுள்ளது. கட்டிடங்களுடன் அரண்களும் வேலிகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
 
இதனையும் அரசாங்கத்திடம் நெடுங்காலமாக சுட்டிக்காட்டி வந்துள்ளோம். இவ்வாறாக குறிப்பாக வட கிழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும்  மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார். 

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தொடர்பான தகவல்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ளதாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா என கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய கால கட்டத்தில் லேப்டாப், கணினி உள்ளிட்டவற்றின் பயன்பாடு மிக அதிகமாகவே உள்ளது. நாள்தோறும் செல்போன், லேப்டாப் போன்ற கதிர்வீச்சுகளைத் தரும் கருவிகளையே பயன்படுத்தி வருகிறோம்.

இவற்றினைப் பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், பயன்படுத்துவதற்கென விதிமுறை உள்ளது. நம் உடல் என்ன ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டாலும், நம் அன்றாட செயல்முறையின் காரணமாக, எதாவதொரு விளைவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையிலேயே, லேப்டாப் பயன்படுத்துவதும் அமையும். மடியில் வைத்து லேப்டாப்பை பயன்படுத்துவதால், ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

விந்தணுக்களின் தரம் பாதிப்பு

லேப்டாப் பயன்படுத்துவதால், ஆண்களுக்கு ஸ்க்ரோடல் ஹைபர்தெர்மியா உருவாகிறது. அதிகமாக AC-ல் இருப்பவர்கள், மடிக்கணினி, கணினி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

நாம் அன்றாட வாழ்வில் கேள்விப்படும் விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இதற்கான முக்கிய காரணம் என்னவென்று நமக்குத் தெரியாது. இதன் விளைவாக, கருவுறுதலில் பாதிப்பு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது என்னென்ன காரணங்களால் ஏற்படுகிறது? இதனை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்துத் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

 

ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், நாட்டின் நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல ஒப்பந்தங்களில் பான் கீ மூன் கைச்சாத்திடவுள்ளார்.

பான் கி-மூன் தற்போது குளோபல் கிரீன் க்ரோத் இன்ஸ்டிடியூட் அல்லது தென் கொரிய அரசு நிறுவனமான GGGI இன் தலைவராக பணியாற்றுகிறார்.

அந்நிறுவனத்தின் தலைவராக பாங்கி மூன் இந்த நாட்டில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார். இலங்கையில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

அந்த ஒப்பந்தங்களின்படி, கொரியாவுடன் இணைந்து இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 

இலங்கை வரும் பான் கீ மூன், பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட உள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக பான் கீ மூன் இதற்கு முன்னர் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். 

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் நாட்டின் முட்டை பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை உணவக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அதனைச் செய்யத் தவறினால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நாட்டுக் கோழிகளை எடுத்துச் சென்று அந்த மிருகங்களின் குரல் கேட்க வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தலைவர், சுதந்திர தினத்தன்று முட்டை மற்றும் கோழிகளுடன் கால் நடையாக சுதந்திர விழாவிற்கு வரவுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் ஆட்சியாளர்களால் முட்டைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாவிட்டால், நாட்டின் பாரிய பிரச்சனைகள் மற்றும் அரசியலமைப்புச் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படும் என இலங்கை உணவக உரிமையாளர்கள் அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். 

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சமர்ப்பித்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ருகாந்த அபேசூரிய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு இவ்வாறான விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும் ஆணைக்குழு பிரதிவாதியாக பெயரிடப்படவில்லை எனவும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 

மனுவில் திருத்தம் செய்ய மனுதாரருக்கு அனுமதியளித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை பரிசீலிக்க மே 19-ம் திகதி கூடி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார மற்றும் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இன்று (ஜன. 27) நள்ளிரவு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என அரசாங்க செய்தியாளர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

அதற்காக அரசு அச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் கீழ் வர்த்தமானி வெளியிட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.