web log free
October 23, 2025
kumar

kumar

பாராளுமன்ற உறுப்பினர் விமல் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்தபோது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக குருந்துவத்தை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அங்கு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகாததால், விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளார். 

கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி நகரங்களுக்கு இடையிலான விரைவு ரயில் ஒருகுடவத்த புகையிரத பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிரதான பாதையில் இயங்கும் ரயில் தடைபட்டுள்ளதாக பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு நோக்கி வரும் சில புகையிரதங்களில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தடம் புரண்ட யாழ்தேவி புகையிரதத்தின் மீட்பு பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் விசேட கருத்தை விடுத்து, உள்ளூராட்சி சபைத் தேர்தல் இலங்கைக்கு இன்றியமையாதது என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

போயா நாட்களில் சுற்றுலா ஹோட்டல்களில் மாத்திரம் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு போயா தினங்களில் மதுபானம் கிடைக்க வழி இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் போயா தினத்தில் சுற்றுலா ஹோட்டல்களில் மட்டும் மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் 115 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

தினேஷ் சந்திமால் 42 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் பிளேர் டிக்னர் 4 விக்கெட்டுக்களையும், மெட் என்ரி 3 விக்கெட்டுக்களையும் மற்றும் டிம் சவுதி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக தனது முதல் இன்னிங்சில் இலங்கை அணி 355 ஓட்டங்களையும், நியூசிலாந்து அணி 373 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தன.

அதன்படி, நியூசிலாந்து அணிக்கு 285 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமைக்குள் 500 மில்லியன் ரூபாவை தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுக்கொள்ளாவிட்டால் தபால் மூல வாக்களிப்பு மேலும் தாமதமாகும் நாங்கள் அறிந்து கொண்டோம்.

புதன் கிழமைக்குள் இந்தப் பணம் கிடைக்காவிட்டால் தபால் மூலம் வாக்களிப்பதற்கான புதிய தேதியை அறிவிக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை தெரிவித்தார்.

மார்ச் 15 ஆம் திகதிக்குள் தேவையான தொகை கிடைக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றத்திற்கு சென்று பணம் கிடைக்காததை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கு தயாராகும் வகையில் இம்மாத இறுதிக்குள் ஆணைக்குழுவுக்கு திறைசேரியில் இருந்து 1100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தேர்தலுக்கான பணத்தை வெளியிடுவதற்கான ஒப்புதலை நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பதிலுக்காக காத்திருப்பதாகவும் திறைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனார்.

குருநாகல், பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறந்து வைப்பதற்காக சென்ற அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவரை அப்பகுதி மக்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.

அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் ஆகியோர் கலாசார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்தது.

அந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர்.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் நிலையானதாக இருந்தால், ஜூன் மாதத்திற்குள் பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவின் தற்போதைய பெறுமதி தொடரும் எனவும், அது நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் கடனைப் பெற்ற பிறகு, பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பும், என்றார்.

கடந்த 10ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாடு செல்வதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு பயணங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறி அவரது வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தனக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையை நீதிமன்றம் விதிக்கவில்லை என எம்.பி தெரிவித்தார்.

இது தொடர்பில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளதோடு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தரவு அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாகவே இவ்வாறான பிழை ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், உண்மைகளை வெளிக்கொணர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு அதிகாரிகள் விசாரணை முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தரவு முறைமையை சரிசெய்ததன் பின்னர், மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு இன்று வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள புகையிரதத்தின் மலசலகூடத்தில் விடப்பட்ட சிசுவின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

26 வயதுடைய திருமணமாகாத தம்பதிகள் இருவரும் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) இரவு 7.00 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த ரயிலில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் புகையிரத அதிகாரிகளும் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் பெற்றோரை கண்டுபிடித்தனர்.

சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதால், குறித்த யுவதிக்கு குழந்தை பிறக்கப் போவதாக கேள்விப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வந்து கொழும்பு பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த 25ம் திகதி குழந்தை பெற்றுக் கொள்ளப்பட்டு, நேற்று குழந்தை ரயிலில் விடப்பட்டது.

பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd