web log free
September 16, 2024
kumar

kumar

06 மற்றும் 08 க்கு இடையில் இலங்கைக்கு வரும் என முன்னர் கூறப்பட்ட எரிவாயு கப்பல் மேலும் தாமதமாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல் 3,724 மெட்ரிக் தொன் எரிவாயுவை இலங்கைக்கு கொண்டு வரவுள்ளதாகவும், காலநிலை மாற்றத்தினால் தாமதமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு வரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் ஜூலை 5- ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். இன்று காளிகாம்பாளை மனதில் நினைத்து வழிபட சங்கடங்கள் விலகும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தின் காரணமாக உடல் அசதி உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

காலையில் சற்று சோர்வாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். இன்று சிவபுராண பாராயணமும் சிவாலய தரிசனமும் நன்மைகளைப் பெற்றுத்தரும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். இன்று அபிராமி அம்பிகையை அந்தாதி பாடித் துதித்தால் நன்மைகள் பெருகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது அவசியம். வியாபாரத்தில் பணியாளர் களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும். இன்று சிவ வழிபாடு செய்வது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணி நெருக்கடி குறையும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. இன்று அதிகாலையில் சூரியபகவானை வணங்கி வழிபட்டு செயல்களைத் தொடங்க நன்மைகள் அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். ஆனால், போதுமான பணம் இருப்பதால் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மாலையில் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி அலுவ லகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். வேங்கடேசப் பெருமாளை வணங்கி வழிபட அனைத்துத் துன்பங்களும் நிவர்த்தியாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களு டைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர் களால் ஆதாயம் உண்டாகும். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். ஶ்ரீரங்கநாதரை இன்று நினைத்துவழிபட தடைகள் நீங்கி செல்வ வளம் பெருகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்று வீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். சிவபெருமானை வழிபாடு செய்தால் சிக்கல்கள் தீரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர நன்மைகள் பெருகும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படக்கூடும்.

மகர ராசி அன்பர்களே!

இன்று எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துச் செய்யவேண்டி இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். துர்கையை வழிபட சங்கடங்கள் விலகும்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சங்கடம் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்ப ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். அதிகாரி அனுசரணையாக நடந்துகொள்வார். சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. மாலை நேரத்துக்குப் பின் அனைத்திலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். முருகப்பெருமானை வழிபட தொல்லைகள் தீரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீன ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மாலையில் உறவினர் அல்லது நண்பர் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் அதனால் மனதில் உற்சாகமும் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். இன்று மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வழிபடுவதோ அவர்களின் அவர்களின் படத்துக்கு மலர் சாத்தி வழிபடுவதோ நற்பலன்களை அதிகப்படுத்தும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

குருணாகல யக்கஹாபிட்டிய ஐ. ஓ. சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் போது சீருடையில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை வயிற்றில் உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சமூகவலைத்தளங்களில் பரவிவரும் காணொளியில், மோதலின் மத்தியில் வந்த லெப்டினன்ட் கர்னல் அந்த நபரை வயிற்றில் எட்டி உதைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் காத்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த அதிகாரியின் செயலுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நாட்களாக இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வெளியாட்கள் வந்து அங்கிருந்து மக்களுடன் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும், இடத்தில் பாதுகாப்பில் இருந்த இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அநாகரீகமாக திட்டி மோதலில் ஈடுபட்ட சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ அதிகாரி அங்கு வந்து இந்த தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவிடம் வினவியபோது, ​​இந்த சம்பவத்தில் இராணுவ அதிகாரியின் களம் தொடர்பில் நிறுவன மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்தவர்கள் இராணுவத்தினரை திட்டி தாக்க முற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பொன்னாலை பகுதியில் நீராடும் வாளியொன்றுக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நேற்று(04) பகல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வாளியினை எட்டிப்பார்க்கும்போதே தவறுதலாக வீழ்ந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலையில் எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர், சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் உட்பட முக்கிய செய்தி நிறுவனங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த செய்திகளில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை. செய்திகளை உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிடவேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில், போலியான செய்திகளை உருவாக்குதல், மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை உருவாக்குதல் அவ்வளவுக்கு நல்லதல்ல. நாட்டின் மக்களை திசைதிருப்புவதற்கு கோபத்தை ஏற்படுத்துவதற்கு இன்றேல் தூண்டும் வகையில் செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

ஜூலை 5 அல்லது 6 ஆம் திகதிகளில் இருந்து வடக்கு, கிழக்கு அல்லது தென்னிலங்கையில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரித்து, பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதம் தொடர்பில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க, குறித்த கடிதத்தின் பிரகாரம் சர்வதேச உளவு நிறுவனங்களின் பங்களிப்புடன் மேற்படி இரண்டு தினங்களில் இடம்பெறவுள்ள கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வுகளை இலக்கு வைத்து இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் எந்தவொரு நிகழ்வுகளிலும் பங்குபற்ற வேண்டாம் என வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இந்த ஆவணம் எச்சரிப்பதாகவும் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பப்பட்ட ஆவணத்தின் சில பகுதிகளை அநுர திஸாநாயக்க வாசித்தார். 

இந்தத் தகவல்கள் எப்படி, எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும், அப்படித் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதையும் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தற்போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களையும் உணர்வுகளையும் நசுக்கவே இவ்வாறான செய்திகள் பகிரப்படுவதாகவும் சந்தேகம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதம நிருவாக அதிகாரி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த அதிகாரி 42 வயதுடைய பெண் எனவும், இன்று காலை கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த அதிகாரி உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர். 

தற்போதைய அரசாங்கம் நீக்கப்பட்டு விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் மக்கள் பதற்றமடைந்துள்ளதால், தலைமை பிக்குகளின் ஆசியுடன் அனைத்துக் கட்சி ஆட்சியை விரைவில் அமைக்க வேண்டும் என்றார்.

அவ்வாறு செய்யாவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குருதெனிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து சேவைகள் நாளை முதல் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிடிபி டிப்போக்கள் ஊடாக பஸ்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னர் ஏற்பாடு செய்திருந்த போதிலும், பிராந்திய டிப்போக்கள் தொடர்ந்தும் மறுத்து தனியார் பஸ்களுக்கான எரிபொருளை மட்டுப்படுத்துவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், சிடிபி பஸ்களை அதிகபட்ச அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படாத போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு பூட்டப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ள நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்யும் வரை இந்த அபாய நிலை தொடரும் எனவும் அறியமுடிகின்றது.

பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி, சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு போதிய எரிபொருளை வழங்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் கடந்த வாரம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை வழங்கிய போதிலும், கடந்த வாரமும் பல அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டன.

இந்நிலையில், அடுத்த வாரத்திற்கு நாட்டு விவகாரங்களை வழமையாகப் பேணுவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அடுத்த வாரம் டீசல் கப்பல் ஒன்றும், அடுத்த வாரம் 22ம் திகதி பெற்றோல் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு வரும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.