web log free
December 22, 2024
kumar

kumar

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

அதற்கமைய;

1.ஹரிணி அமரசூரிய-(பிரதமர்) – கல்வி,உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்

2.விஜித ஹேரத்-வெளிநாட்டு அலுவல்கள்,வௌிநாட்டு வேலைவாய்ப்பு,சுற்றுலாத்துறை

3.சஞ்சன அபேரத்ன -பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள்

4.ஹர்ஷண நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு

5.சரோஜா சாவித்திரி போல்ராஜ்- மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் விவகாரம்

6.கே,டி.லால்காந்த -விவசாயம் ,கால்நடைகள்,காணி மற்றும் நீர்ப்பாசனம்

7.அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு

8.ராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள்

9.உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

10.சுனில் ஹந்துன் நெத்தி-கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி

11.ஆனந்த விஜயபால-பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

12.பிமல் ரத்நாயக்க-போக்குவரத்து-நெடுஞ்சாலைகள்

13.ஹினிதும சுனில் செனவி – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்

14.நளிந்த ஜயதிஸ்ஸ- சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு

15.சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு

16.சுனில் குமார கமகே- இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை

17.வசந்த சமரசிங்க – வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

18.கிருஷாந்த சில்வா அபேசேன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்

19.அணில் ஜயசுந்தர பெர்னாண்டோ-தொழில் அமைச்சர்

20.குமார ஜெயக்கொடி -வலுசக்தி அமைச்சர்

21.டாக்டர் தம்மிக்க பட்டபெந்தி- சுற்றாடல் அமைச்சர்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று(18) பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. 

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

விஜித ஹேரத் வௌிவிவகாரம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சராகவும் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர்.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக கே.டி லால்காந்த நியமனம் பெற்றார். 

சரோஜா சாவித்ரி போல்ராஜ் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராகவும் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார - நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இராமலிங்கம் சந்திரசேகரன் கடற்றொழில், நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சராகவும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சராக அனுர கருணாதிலக்கவும் பதவியேற்றனர். 

சுனில் ஹந்துன்நெத்தி கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராகவும் பேராசிரியர் உபாலி பன்னிலகே, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர். 

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சராக ஆனந்த விஜேபாலவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பிமல் ரத்நாயக்கவும் தெரிவுசெய்யப்பட்டனர். 

பேராசிரியர் ஹினிந்தும சுனில் செனவி புத்த சாசனங்கள், சமய மற்றும் கலாசார விவகார அமைச்சராகவும் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார மற்றும் ஊடக அமைச்சராகவும் நியமனம் பெற்றனர். 

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக சமந்த வித்யாரத்னவும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

வசந்த சமரசிங்க வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராகவும் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பதவியேற்றனர். 

பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தொழில் அமைச்சராகவும் பொறியிலாளரான குமார ஜயகொடி வலுசக்தி அமைச்சராகவும் டொக்டர் தம்மிக பட்பெதி சுற்றாடல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்

மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ அவர்கள் 2024 நவம்பர் 18 அன்று மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதுடன், மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா மற்றும் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். 

பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள், நிதி, வங்கியியல் மற்றும் உயர் கல்வி ஆகிய துறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். கல்விமானாக அவர் கணிசமான பங்களிப்புக்களை ஆற்றியுள்ளதுடன், களனி பல்கலைக்கழகத்தில் நிதியியல் கற்கைப்பிரிவில் பேராசிரியராகவும், அதன் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

ஆசிரியப்பணியில் 27 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மகத்தான அனுபவத்துடன், கல்வித்துறையில் ஆற்றியுள்ள முன்னோடிப் பணிகளுக்காக பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் நன்மதிப்பை சம்பாதித்துள்ள அதேசமயம், பல்வேறு புத்தாக்கமான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை அவர் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் நிதித்துறைக் கல்வியின் தராதரங்களை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். வணிகம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக, உலக வங்கியின் யுர்நுயுனு மானிய உதவிகளை வெற்றிகரமாக பெற்றுக்கொண்டமை, களனி பல்கலைக்கழகத்தின் ஆடீயு கற்கைநெறிக்கு ஐளுழு 21001 சான்று அங்கீகாரத்தை ஈட்டியமை போன்றவை அடங்கலாக, பல்வேறு முயற்சிகளை அவர் முன்னின்று வழிநடாத்தியுள்ளார்.       

கல்வித்துறையில் அவரது சாதனைகளுக்குப் புறம்பாக, ஊநவெசயட ஊhiயெ ழேசஅயட ருniஎநசளவைல என்ற பல்கலைக்கழகத்தில் அரச பொருளாதாரத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் பெற்றுள்ளார். பிரசித்தி பெற்ற கொழும்புத் திட்ட புலமைப்பரிசில் மூலமாக, மேற்கு வங்காள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆடீயு பட்டத்தையும் பெற்றுள்ள அவர், களனி பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ (கணக்கியல்) பட்டதாரியும் ஆவார்.   

கொழும்பு பங்குச் சந்தை, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு போன்ற இலங்கையிலுள்ள முன்னணி நிதி நிறுவனங்களில் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும், வளவாளராகவும் பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் சேவையாற்றியுள்ளார். 

இலங்கையிலுள்ள மிகவும் நன்மதிப்பிற்குரிய நிதி நிறுவனங்களில் ஒன்றுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தமைக்காக தனது நன்றிகளையும் இவ்வைபவத்தின் போது பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் வெளிப்படுத்தினார். தேசத்தில் பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளுக்கு உதவுவதில் டிஜிட்டல் வளர்ச்சியை மேம்படுத்தி, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட வளர்ச்சியை முன்னெடுத்து, வலுவான மற்றும் இன்னும் கூடுதலான அளவில் நிலைபேறு கொண்ட வங்கி வலையமைப்பாக மக்கள் வங்கியைத் திகழச் செய்வது குறித்த தனது இலக்கினையும் அவர் வலியுறுத்தினார். 

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலும் மாற்றம் வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சஜித் பிரேமதாசவுக்கு எதிர்கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலைவர் ஆகிய இரு பதவிகளையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது என சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட கடும் தோல்வியுடன் கட்சியில் வலுவான மாற்றம் தேவை என்று ஐக்கிய மக்கள் சக்திக்குள் கருத்து பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாசவின் தலைமையில் இதுவரை இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களும் இரண்டு பொதுத் தேர்தல்களும் தோல்வியடைந்துள்ள நிலையில், இரண்டிலும் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு அதிகாரம் கிடைக்காமல் தடுப்பதில் கட்சி தோல்வி கண்டுள்ளது. 

அத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சஜித் பிரேமதாச 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் ஆளும் கட்சிக்கு 150 கேள்விகளை முன்வைத்த போதும் அது மக்களைக் கவரவில்லை என்பது அவர்களின் கருத்தாகும்.

அத்துடன், மக்கள் பாரம்பரிய அரசியலை முற்றாக நிராகரித்து இடதுசாரி அரசை உருவாக்கி மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் அதிகாரத்தை வழங்கியிருக்கும் இவ்வேளையில் sjb பிரதான எதிர்க்கட்சியாக பலமான மாற்றத்தை மக்களிடம் காட்ட வேண்டும்.

கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச தொடர்ந்தும் இருக்கும் நிலையில், கலாநிதி ஹர்ஷ டி சில்வாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென கட்சிக்குள்ளேயே பலத்த கருத்து எழுந்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹர்ஷ டி சில்வா கட்சியில் பிரபல்யமான, படித்த, புத்திசாலி மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவராக இருப்பதால், அவர் இந்த நேரத்தில் எதிர்க்கட்சியை வழிநடத்த பொருத்தமானவர் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சியில் உள்ள பலர் இந்த முன்மொழிவுக்கு தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்துள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலில் அதன் தலைவர் திலித் ஜயவீரவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க கட்சியின் உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளது. 

அதன்படி அவரது பெயரை பரிந்துரை செய்து கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்ப உள்ளார். 

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளது. 

அதன்படி, அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்ய தனக்கும் தனது கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சிக்கும் போதிய நேரம் கிடைக்கவில்லை என்று அக்கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க கூறுகிறார்.

'வெற்றிகரமான பிரச்சாரத்தை நடத்த எங்களுக்கு அதிக நேரம் இல்லை. நாங்கள் 9 அக்டோபர் 2024 அன்று எங்கள் கட்சியை உருவாக்கினோம். பிரச்சார நடவடிக்கைகளுக்கு 22 நாட்கள் மட்டுமே இருந்தது என்றார்.

இத்தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சியால் எந்த ஆசனத்தையும் வெல்ல முடியவில்லை.

தேசிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்வதற்கு நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எடுத்த தீர்மானத்திற்கு மதிப்பளிப்பதாகவும், தன்னையும் பழனி திகாம்பரத்தையும் வெற்றிபெறச் செய்ய தோட்ட மக்கள் உழைத்ததாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பி.எம்.விரதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

நுவரெலியா நகரில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியதாக வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த வி.இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தியை வெற்றி பெற வைப்பதற்கு தோட்ட மக்களும் பெருந்தொகையாக வாக்களித்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார். 

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 225, இதில் 196 எம்.பி.க்கள் மக்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

ஒவ்வொரு கட்சியும் சுயேச்சைக் குழுவும் பெறும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அவர்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

அதன்படி, அண்மைய (14) தேர்தலில் ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு கட்சியும் பெற்றுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை கீழே,

தேசிய மக்கள் சக்தி - 18

ஐக்கிய மக்கள் கூட்டணி- 5

இலங்கை தமிழ் அரசு கட்சி- 1

புதிய ஜனநாயக முன்னணி - 2

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 1

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1

சர்வஜன அதிகாரம்- 1

இதேவேளை, 10ஆவது பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் எம்.பி.க்களின் பதவிகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கலந்துரையாடல் தொடர்வதாக அதன் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நாமல் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட உள்ளது.

இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எஞ்சிய கட்சிகள் இன்னும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டிய தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பட்டியலைத் தயாரிக்கவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd