web log free
May 27, 2024
kumar

kumar

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேயுடன் சென்ற குழுவினர், கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தின் மீது முட்டைகளை கொண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த அரசாங்கம் மக்களுக்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பி, பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினருடன் வருகை தந்த சிலர் முதலில் போராட்டத்தை ஆரம்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகம் மீது முட்டைகளால் தாக்குதல் நடத்தியதுடன், அலுவலகத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர்.

பொலிஸார் பார்த்துக் கொண்டு இருக்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமாரவின் வாகனத்தின் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 

கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற ´நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை உயிரிழந்துள்ளது.

இன்று காலை யா​னை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழக்கும் போது ´நெந்துன்கமுவே ராஜா´வுக்கு வயது 69 ஆகும்.

நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ´நெந்துன்கமுவே ராஜா´ கடந்த முறையும் எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மற்றும் பிரதிவாதிகள் 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயிட் அல் ஹுசைன், கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பிரதிவாதிகள் 6 பேர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைத் தவிர, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாவார்.

கப்பல்களில் கொண்டுவரப்பட்டுள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் , நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் உள்ளிட்ட ஏனைய மின்னுற்பத்தி நிலையங்களுக்கு டீசல் வழங்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

எண்ணாயிரம் மெற்றிக் தொன் டீசல் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன. மின்னுற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான 37 ஆயிரம் மெற்றிக்தொன் மசகெண்ணெயை ஏற்றிய கப்பலொன்று இன்று இலங்கை வரவுள்ளது.

அந்த எரிபொருள் களனிதிஸ்ஸ உள்ளிட்ட மின்னுற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று நேற்று இடம்பெற்றது.

மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் குறித்து இதன் போது ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருள் பிரச்சினை எதிர்வரும் தினங்களில் தீர்க்கப்படும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதேசமயம் எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இதுவரை காணாத வகையில் உயர்வடைந்துள்ளதாக சர்வதேச சந்தை நிலவரங்கள் தெரிவிக்கிறது .

அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 130 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் 13 வருடங்களில் இவ்வாறு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனின் மத்திய, வடக்கு, தெற்கில் இருக்கும் நகரங்களில் இரவு நேரத்திலும் ரஷ்யப் படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது 12 ஆவது நாளாக ரஷ்யா போர் தொடங்கி தாக்குதல் நடாத்தி வருகின்றது.

முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராக உக்ரைன் இராணுவமும் கடுமையாகப் போராடி வருகின்றது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன. மேலும் அந்நாட்டின் 02 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ளது.     

 

 

தற்போது சந்தையில் லிட்ரோ எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. லாஃப் கேஸ் அதன் விநியோகத்தை பல மாதங்களாக கடுமையாக கட்டுப்படுத்தி வருகிறது.

எரிவாயு ஏற்றிய  இரண்டு கப்பல்கள் ஏற்கனவே கொழும்பை வந்தடைந்துள்ள நிலையில், டொலர் நெருக்கடி காரணமாக அவை தரையிறங்குவது சுமார் ஒருவாரம் தாமதமாகியுள்ளது.

லிட்ரோவின் உள்ளக வட்டாரங்களின்படி, கடந்த வாரம் பெப்ரவரி 28ஆம் திகதி முதல் லிட்ரோவிடம் எரிவாயு முகவர் இல்லை.

இரண்டு வருட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், நீண்ட கால விநியோக ஒப்பந்தத்தில் இருந்து விலகி, அவசரமாக இறக்குமதி செய்ய லிட்ரோ தயாராகி வருகிறது.

இதற்குக் காரணம் மிகக் குறைந்த விலையில் எரிவாயுவை வாங்க முடியும் என்று கணிப்பதனாலாகும்.

இதனால், மார்ச் மாதத்துக்குத் தேவையான 30,000 மெட்ரிக் டொன்களை வழங்க எந்த ஒரு விநியோகஸ்தர்களும் இதுவரை முன்வரவில்லை.

80% சந்தையை வைத்திருக்கும் லிட்ரோ நிறுவனங்களால் சிங்கள - தமிழ் புத்தாண்டு காலத்தில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், லாஃப் கேஸ் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், சந்தையில் 20% பங்குகளை வைத்திருக்கும் லாஃப் கேஸ் நிறுவனம் சீர்குலைந்துள்ளது.

தொழில் மற்றும் எரிவாயு நெருக்கடியால் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால், குறிப்பாக சுற்றுலாத் துறைக்கு அத்தியாவசிய எரிவாயு பற்றாக்குறையால் நெருக்கடி அதிகரிக்கும்.

இது தொடர்பாக லிட்ரோவின் தலைவர் தெசர ஜயசிங்கவிடம் விசாரிக்க லிட்ரோவினால் அவசர அழைப்பு மூலம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, அதுவும் வெற்றியளிக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் கிழக்கு சனசமூக மண்டபத்துக்கு அருகாமையில் உள்ள காணியை, கடந்த 2ஆம் திகதியன்று துப்பரவு செய்து கொண்டிருந்த போது புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்தப் பகுதிக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட நீதிமன்ற அனுமதிக்கப் பின்னர், அடையாளப்படுத்தப்பட்டிருந்த அந்தப் பகுதி, வெடிபொருள் செயலிழக்கும் சிறப்பு அதிரடிப்படையினரால், கடந்த 4ஆம் திகதி தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது, விடுதலைப்புலிகளின் தயாரிப்பான “தமிழன் கைக்குண்டுகள்” 220 மீட்கப்பட்டுள்ளன. இவற்றை அழிப்பதற்கு நீதின்ற உத்தரவு வழங்கியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 14-ந்தேதி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து மேலூர் போலீசில் புகார் கொடுத்த சிறுமியின் பெற்றோர் வழக்குப்பதிவு செய்யாமல் சிறுமியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளனர்.

அதன்படி போலீசார் மனு ரசீது மட்டும் கொடுத்து விட்டு விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதின்பேரில் மேலூர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சுல்தான் மகன் நாகூர்அனிபா என்ற வாலிபருக்கும் காதல் இருந்தது தெரியவந்தது.

எனவே அவர்தான் சிறுமியை அழைத்து சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நாகூர்அனிபாவின் தாயார் மதினாபேகம் கடந்த 3-ந்தேதி சிறுமியை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டு சென்றார்.

வீட்டிற்கு வந்த சிறுமி சோர்வாக காணப்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் சிறுமியை மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை சீராகவில்லை.

இதனால் டாக்டர்கள் ஆலோசனைபடி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்ற விவரம் தெரியாததால் சிகிச்சையில் சரியான முடிவு எடுக்க முடியவில்லை. எனவே நாகூர் அனிபாவை விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.

ஆனால் அவர் தலைமறைவாக இருந்ததால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மதுரை, சென்னை, திருப்பூர் பகுதிகளுக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் வைத்து நாகூர் அனிபா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

கடந்த 14-ந்தேதி திருமண ஆசை காட்டி சிறுமியை மதுரையில் உள்ள தனது நண்பர் பெருமாள் கிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு நாகூர் அனிபா அழைத்து வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனது சித்தப்பா இப்ராகிம் வீட்டுக்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதற்கிடையில் சிறுமி மாயமானது தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் நாகூர் அனிபா பயந்துபோனார். இதனால் வி‌ஷம் (எலி பேஸ்ட்) வாங்கிய நாகூர் அனிபா அதை சிறுமிக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார். ஆனால் சிறிதுநேரத்தில் அவர் அதனை துப்பி விட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் இதுபற்றி யாரிடமும் கூறாமல் சிறுமியை கொண்டு வந்து தனது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு அவரது வீட்டில் விட்டு விடுங்கள் என நாகூர் அனிபா கூறி சென்றுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளன.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நாகூர் அனிபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட மதுரை திருநகர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் கிருஷ்ணன், ராஜா முகமது, திருப்பூர் சாகுல் அமீது, நாகூர் அனிபா தாயார் மதினா பேகம், உறவினர்கள் ரம்ஜான்பேகம் என்ற கண்ணம்மாள், ராஜா முகமது ஆகிய 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் நாகூர் அனிபா பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிக்கு எலி மருந்து கொடுக்கப்பட்ட விவரம் தெரியவந்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

என்றாலும் அந்த சிறுமி மயங்கிய நிலையில் இருந்தார். அவருக்கு மயக்கம் தெளிந்தால் தான் அவர் திருப்பூர் கடத்தி செல்லப்பட்டு எத்தகைய பாலியல் கொடூரத்துக்கு ஆளானார் என்பது தெரிய வரும் என்று போலீசார் கருதினார்கள்.

அந்த சிறுமி திருப்பூரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. ஆனால் போலீஸ் தரப்பில் இந்த புகார் மறுக்கப்பட்டது. எனவே சிறுமி மயக்கம் தெளிந்தால் தான் உண்மை நிலவரம் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த சிறுமி இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இதனால் அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் உண்மை தெரியாமலேயே புதைந்து போனது.

நடிகர் கார்த்தி நடத்திவரும் உழவன் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் உழவர் பவுண்டேஷன் சார்பில் 'உழவர் விருது 2022' நேற்று நடைபெற்றது.
 
சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடந்த இந்த விழாவில் உழவன் பவுண்டேஷன் நிறுவனர் நடிகர் கார்த்தி, நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
 
 
இந்த விழாவில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவர் பேசியதாவது, உழவர் பவுண்டேஷன் தொடங்கிய கார்த்தியும் ஏழை பெண் விவசாயியின் பேரன்தான்.  இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.
 
நான் பிறந்த போது 10 மாதத்தில் என் அப்பா இறந்து விட்டார். என் அப்பா மரணத்திற்கு பிறகு என் அம்மாதான் என்னை வளர்த்தார். அரளி செடியும், எருக்கம் செடியும் உள்ள ஊரில் என்னை வளர்த்தார், அதனால் தான் இப்போது உங்கள் முன்னால் நான் நிற்கிறேன். என் அம்மா எனக்கு தலை வாரிவிட்டதில்லை, உணவு ஊட்டிவிட்டதில்லை. தனி ஆளாக விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார்.
 
விவசாயத்தில் அதிகமான வேலைகளை பெண்கள் தான் செய்கின்றனர். நாம் சிலையை தான் கும்பிடுகிறோம். கடவுளை யாரும் பார்க்கவில்லை. பெண்கள் தான் கடவுள் என்று நெகிழ்ந்து பேசியபோதே கண்கலங்கி அழுதார்.