web log free
June 13, 2024
kumar

kumar

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான
போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு இன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 133 பேர் பயணித்தனர்.

விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலைமீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பெரும் தீ விபத்து எற்பட்டது. 

இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றுள்ளனர். விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை என்ன ஆனது? என்பது  குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையுள்ள 29 கிமீ தொலைவை 13 மணிநேரம் 10 நிமிட நேரத்தில் கடலில் நீந்தி வந்து சாதனை படைத்திருக்கிறார் ஆட்டிசம் ஸ்பெக்டரம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர். சாதனை சிறுமிக்கு நினைவு பரிசு, பூங்கொத்து கொடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார்.

மும்பை இந்திய கடற்படை நிலையத்தில் பணிபுரிபவர் மதன் ராய் இவரது மனைவி ரச்சானா ராய். இத்தம்பதியரின் மகளான ஜியா ராய் என்ற 13 வயது சிறுமி காது கேளாத வாய்பேசாத மாற்றுத்திறனாளி ஆவார்.

சிறுமி ஜியாராய் ஆட்டிசம் ஸ்பெக்டரம் பாதிப்புக்குள்ளானவர். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு குளத்தில் குளிக்கும்போது மாற்றுத்திறனாளியான ஜியா ராய் நீச்சல் அடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

 இதையடுத்து ஜியா ராயின் தந்தையான மதன் ராய் தனது மகளுக்கு நீச்சல் மீது அதிக ஆர்வம் இருப்பதை கண்டு முறையாக பயிற்சி வழங்க முடிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுமி ஜியா ராய் இலங்கை தலைமன்னாரில் இருந்து 28.5 கிலோ மீட்டர் தொலைவை 13 மணி நேரம் 10 நிமிடங்களில் நீந்தி வந்து தனுஷ்கோடி அடுத்துள்ள அரிசல்முனைப்பகுதியை வந்தடைந்தார்.

மேலும் இதுவரை இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனை வரை மாற்றுத்திறனாளி யாருமே நீந்தி வராத நிலையில் முதல் முதலாக மும்பையைச் சேர்ந்த காதுகேளாத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான ஜியா ராய் 13 மணி நேரத்தில் கடலில் நீந்தி வந்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்த மாற்றுத்திறனாளி ஜியா ராயை கரையில் இருந்த சுற்றுலா பயணிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பின்னர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நினைவு பரிசு, பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். இதனால் மாற்றுத்திறனாளியின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் கடலில் நீந்தி வந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இந்திய கடலோர காவல் படை, கடற்படை, மரைன் போலீசார் கடலில் பாதுகாப்பு வழங்கியதோடு கடற்கரைக்கு வந்த பின்னர் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது:-

இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனை வரை பலவிதமான கடல் உயிரினங்களான கடல் பசு, ஜெல்லி மீன் வாழகூடிய கடல் பகுதியாக இருப்பதால் பலவித சவால்களை சந்தித்து மாற்றுத்திறனாளி சிறுமி நீந்தி வந்தது பாராட்டுக்குரிய விஷயம் என்றார்.

மேலும் நீச்சல் தெரியாமல் குளங்களில் ஆறுகளில் மற்றும் மெரினா கடற்கரையில் ஒரு ஆண்டிற்கு 100 பேர் இறப்பதாகவும், நீச்சல் பயில தற்போதைய இளைஞர்கள் மத்தியில் கடலில் நீச்சலடிக்கும் ஆர்வம் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, சிறுமியை ஊக்கப்படுத்தி இவ்வளவு தூரம் பயணிக்க வைத்த பெற்றோர்களை அவர் வெகுவாக பாராட்டினார்.

ஜியாராய் 2021 ஆம் ஆண்டு மும்பை கடலில் 36 கிலோமீட்டர் நீந்தி சாதனை படைத்தார். இவரது சாதனையை பிரதமர் நரேந்திர மோடி 'மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல தசாப்தகாலங்களில் இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருடிக்கடிக்கு தீர்வை காண இலங்கைக்கு உதவுவதற்காக 1.5மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றது விரைவில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் தெரிவித்துள்ளார்.

இதுதவிர இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ள ஒரு பில்லியன் டொலர் கடனுதவி குறித்தும் ஆராயப்படுவதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 18 ம் திகதி சீனாவின் அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 500 மி;ல்லியன் டொலர்களை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மருந்துகள் போன்ற அவசியமான இறக்குமதிகளிற்கான கட்டணங்களை செலுத்துமுடியாமல் திணறும் இலங்கை போதியளவு எரிபொருள் இன்மையால் மின்;வெட்டை நடைமுறைப்படுத்துகின்றது.

சீனாவின் கடன்களை மறுசீரமைப்பு செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள சீன தூதுவர் இந்த பிரச்சினைக்கு இறுதி தீர்வை காண்பதே எங்கள் நோக்கம் ஆனால் இதற்கான பல வழிகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜப்பானிற்கு அடுத்தபடியாக இலங்கைக்கு அதிக நிதி உதவியை வழங்கும் நாடு சீனா.

பெருந்தெருக்கள்,விமானநிலையம் அனல் மின்நிலையம் துறைமுகம் ஆகியவற்றை உருவாக்குவதற்காக கடந்த தசாப்தகாலத்தில் இலங்கைக்கு சீனா ஐந்து பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

ஆனால் இந்த நிதி மூலம் உருவாக்கப்பட்ட திட்டங்கள் பொருளாதார ரீதியில் வெற்றியளிக்கவில்லை என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்-இதனை சீனா நிராகரித்துள்ளது.

ஜனவரி மாதம் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜியை சந்தித்தவேளை கடன்களை மீளப்பெறுவதை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார் ஆனால் சீனா இதுவரை இது குறித்து பதிலளிக்கவில்லை.

சீனாவிற்கு இலங்கை 400 முதல் 500 மி;ல்லியன் டொலர் கடனை திருப்பி செலுத்தவேண்டியுள்ளது எனநிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என ராஜபக்ச கடந்தவாரம் தெரிவி;த்தார்.

பேச்சுவார்த்தைகள் ஏப்பிரல் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளன.

அனைத்து கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து கட்சிகள் மாநாட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய டொலர் நெருக்கடி காரணமாக தூதரக சேவையும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை பராமரிப்பது வெளிவிவகார அமைச்சுக்கு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

இதனையடுத்து பாக்தாத்தில் உள்ள ஈராக் தூதரகம் நார்வேயின் ஒஸ்லோவில் உள்ள தனது தூதரகத்தை மார்ச் 31ஆம் தேதி முதல் மூட முடிவு செய்துள்ளது. துபாயில் உள்ள துணைத் தூதரகம் மூலம் ஈராக்குடன் இராஜதந்திர உறவுகளையும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள துணைத் தூதரகத்தின் மூலம் நோர்வேயுடன் இராஜதந்திர உறவுகளையும் பேண முடிவு செய்துள்ளது.

மேலும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணைத் தூதரகம் மார்ச் 31ஆம் திகதி மூடப்பட்டு கான்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக செயற்பட முடிவு செய்துள்ளது.

 

நிட்டம்புவ - ஹொரகொல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்த இளைஞரொருவருக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.


இந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.


சம்பவ இடத்திலிருந்து சந்தேகநபரான முச்சக்கரவண்டி சாரதி தப்பியோடிய நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் சந்தேகநபரை தேடும் நடவடிக்கையையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தாள் தட்டுப்பாடு காரணமாக ஒத்திவைக்கப்படவிருந்த மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தவணைப் பரீட்சைகளை மீண்டும் நடாத்துவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான தாள்களை தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தவணைப் பரீட்சைகள் திட்டமிட்ட அட்டவணையின்படி மார்ச் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

மேலும், தரம் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் இன்று (21) முதல் வழமை போன்று நடைபெறும் என கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்துள்ளார்

ரஷ்யா – உக்ரைன் போர் நிலைமை காரணமாக தற்போதைய உலகளாவிய ரீதிய எரிபொருள் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வை வழங்குவதற்கான 10 பரிந்துரைகளை சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) வெளியிட்டுள்ளது.

 இந்த முன்மொழிவுகளை படிப்படியாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் நுகர்வோரின் பழக்கங்களை மாற்றுவதன் மூலம் 4 மாதங்களில் உலகில் எரிபொருள் பாவனையை பெரல் 2.7 ஆல் குறைப்பதற்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள முடியம் என எரிபொருள் பரிசோதைனை குழு தெரிவித்துள்ளது.

குறித்த 10 பரிதுரைகள் பின்வருமாறு…

* வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல்

* அதிவேக நெடுஞ்சாலைகளில் வேக வரம்பை மணிக்கு 10 கி.மீ ஆக குறைத்தல்.

* முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.

* ஞாயிற்றுக்கிழமைகளை நகரத்தில் மோட்டார் வாகனங்கள் இல்லாத நாளாக மாற்றுதல்.

* எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க தனியார் வாகனங்களின் இடத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.

* பெரிய நகரங்களுக்கு தனியார் வாகனங்கள் நுழைவதைக் கட்டுப்படுத்துதல். (திகதி முன்பதிவு, வாகன எண் தகடுகளின்படி வருகை அமைப்பு)

* பொருட்களை கொண்டுசெல்லும் போது திறமையான போக்குவரத்தை உறுதி செய்தல்.

* விமானப் போக்குவரத்திற்குப் பதிலாக அதிவேக ரயில் மற்றும் இரவு ரயில் சேவையை பழக்கப்படுத்துதல்.

* வணிக வகுப்பு விமானங்களை நிறுத்திவிட்டு மாற்றுப் பயன்பாடுகளுக்கு மாறுதல்.

* பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களைப் பயன்படுத்துதல்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். அதோடு அவரது கேப்டன்சியில் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்கிற காரணத்தினால் மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து அவர் வெளியேறி உள்ளார்.

இந்நிலையில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடி வந்தாலும் இன்னும் அவரது 71-வது சதத்தை அடிக்காமல் தாமதித்து வருகிறார். இதன் காரணமாக அவரின் பேட்டிங் பார்ம் மீது இன்னும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

மேலும் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரிலும் அவரது பேட்டிங் சுமாராகவே இருந்ததனால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவர் பின்தங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு பின்னர் விராட் கோலி டெல்லி அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாட போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் கடந்த ஆண்டு வரை கேப்டனாக செயல்பட்ட அவர் பணிச்சுமை காரணமாக அந்த கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி தற்போது முழு நேர பேட்ஸ்மேனாக விளையாட இருக்கிறார்.

பின்னர் இந்த ஐபிஎல் தொடர் முடிந்து இந்தியா வரும் தென் ஆப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த தொடரில் இருந்து வெளியேறும் விராட் கோலி டெல்லி அணிக்காக இரண்டாம் பாதி ரஞ்சி டிராபியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகின்றன. இதற்கு பின்னர் பிசிசிஐ தலைவர் கங்குலி கொடுக்கும் அழுத்தம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் ரன் குவிக்க தடுமாறிய வேளையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அவர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடி தங்களை நிரூபித்தால் நிச்சயம் மீண்டும் தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்று பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் ரஞ்சி போட்டிகளில் விளையாடினர்.

அதே வகையில் தற்போது கோலியின் மீதும் அழுத்தம் அதிகரித்து உள்ளது, இதன் காரணமாகவே தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட யோசித்திருக்கிறார். இதையும் படிங்க : நான் ஸ்கூல் படிக்கும்போதே அப்படித்தான் – கெத்தான பள்ளி வாழ்க்கை கதையை பகிர்ந்த கெளதம் கம்பீர் ரஞ்சி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோலி மீண்டும் பழைய பார்ம்முடன் திரும்ப வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இருப்பினும் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் தென்னாபிரிக்க தொடருக்கான அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. 'தேர்தல் செல்லாது' என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணவும் உத்தரவிட்டது.

அதன்படி, இன்று காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி, பலத்த போலீஸ் பாதுகாப்புகளுடன் எண்ணப்பட்டு வந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 500 வாக்குகள் பதிவாகியிருந்தது. அதில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவாகின. நடிகர் சங்க தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசம் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

விறுவிறுப்பாக நடிந்து வந்த வாக்கு எண்ணும் பணி சில காரணங்களால் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது. இந்நிலையில் பாண்டவர் அணி சார்ப்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1701 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.