web log free
January 13, 2025
kumar

kumar

தினம் தினம் திருநாளே!' தினப்பலன் ஜூன் 6-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். தந்தையின் உடல்நல னில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே!

மனதில் சிறுசிறு குழப்பங்கள் தோன்றி மறையும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. தொடங்கும் காரியம் இழுபறியானாலும் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். லாபமும் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

கடக ராசி அன்பர்களே!

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற் படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரி களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும். இன்று விநாயகர் வழிபாடு நன்று. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

கன்னி ராசி அன்பர்களே!

தேவையான பணம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேச நேரிடும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் வீண் செலவுகளும் பணியாளர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும். முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். எதிர்பாராத ஆதாயங்களுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். இன்று சரபேஸ்வரரை வழிபடவும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்து விடும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். கணவன் - மனைவிக்கிடையே மூன்றாவது நபர் களின் தலையீட்டை கண்டிப்பாக அனுமதிக்கவேண்டாம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிப்பதில் பணியாளர்கள் ஊக்கத்து டன் செயல்படுவார்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே!

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமா ளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக் கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவி இருவரும் ஒரு வரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். பொறுமை மிக அவசியம். இன்று அம்பிகையை வழிபடுவது மிகச் சிறப்பு. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தந்தைவழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படுகிறது. இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

கும்ப ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அவர் மூலம் பணவரவும் உண்டு. வியாபாரம் அமோகமாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும். விநாயகரை வழிபடுவது நன்று. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.

மீன ராசி அன்பர்களே!

காரியங்கள் வெற்றிகரமாகவும் ஆதாயம் தருவதாகவும் முடியும். துணிச் சலுடன் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண் டாகும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் செலவுகள் ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நோய் இலகுவாகப் பரவும் எனவும், ஒரு தடவை தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாராசிட்டமால் போன்றவற்றைக் குடிக்கக் கொடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது கொடிய நோயல்ல என்றும், 6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மறுபிரவேசப் படமான பதான், ஜனவரி 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர். இதேபோல், ராஜ்குமார் ஹிரானியின் பன்கி படம் குறித்து அறிவிக்கப்பட்டது.

அப்படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி நிடிக்கிறார். இந்த படம் டிசம்பர் 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரம் ஷாருக்கான் அட்லி கூட்டணியுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ஜவான் குறித்து அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாப் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 4000 ரூபாவை தாண்டும் என ஷுன்ரி லங்கா கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

வற் வரி உட்பட பல வரிகள் அதிகரிக்கப்படுவதால் சீமெந்தின் விலை அதிகரிக்கும் என சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சிமென்ட் மூட்டையின் விலை ரூ.3,000 ஆக உயர்ந்துள்ளதாகவும், வரி அதிகரிப்பால் விலை கணிசமாக உயரும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரியவிற்கும் இடையில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் மற்றும் பாராளுமன்றத்தில் குழுக்களை மிகவும் திறம்பட செயல்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தணிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துத் பிரதமர் விளக்கமளித்தார். அந்த நடவடிக்கைகளுக்கு நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் தனது ஆசிர்வாதங்களை வழங்கும் என கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது அரசாங்கத்தின் பாரிய முன்னெடுப்பாக அமைய வேண்டுமென தமது அமைப்பு உறுதியாக நம்புவதாக ஜெயசூரிய மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, கலாநிதி சுஜாதா கமகே, சுனில் ஜயசேகர, ஹரேந்திர தசநாயக்க, ரிச்சர்ட் தனிப்புலஆராச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர். 

இலங்கைக்கு சலுகை அடிப்படையில் டீசல் வழங்குவதற்கு சீனா முன்வைத்துள்ள பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கையின் அவசரத் தேவையாக மாறியுள்ள டீசலை வழங்குவதற்கான சீனாவின் யோசனைக்கு இலங்கை பதிலளிக்கவில்லை எனத் தெரியவந்துள்ள நிலையில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் சீனாவின் பிரேரணைக்கு இலங்கை பதிலளிக்காதது சீனாவிற்கு ஆச்சரியமளிப்பதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் டீசல் விநியோகிக்கப்படும் என அதன் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.

தற்போது தினசரி டீசல் விநியோகம் சுமார் 2500 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

நாட்டில் தற்போது சுமார் 40,000 மெட்ரிக் டன் டீசல் உள்ளது.

அடுத்த 09 அல்லது 10 நாட்களில் ஒரு கப்பல் வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அது நிச்சயமற்றதாகவே உள்ளது.

இந்தியாவின் உதவியுடன், அடுத்த டீசல் கப்பல் வரும் 16ம் திகதி வரும் வரை, தற்போதுள்ள டீசல் இருப்புகளை நிர்வகிக்க கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளது. 

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் சென்னையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையினை நிலைநாட்டும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியிருந்தார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு வருகை தந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

எனினும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி எவ்வித பதிலையும் இதுவரை வழங்கவில்லை. 

எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ளப்பட்ட தேசிய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஜூன் 6 முதல் 10 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும் மற்றும் ஜூன் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd