இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மாலைதீவில் அடைக்கலம் அளிக்கக் கூடாது என்று கோரி மாலைத் தீவு ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தின் மீது பொலிசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.
காலிமுகத்திடலில் போராட்ட களத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை பேரணியாக சென்ற குழுவொன்று, பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்ய வேண்டும் என கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேல் மாகாணம் முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தையும் பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராஜனாமா கடிதத்தை கையளித்துள்ளதாவும் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயல்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ரணிலை எஞ்சிய காலப்பகுதிக்கு நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதியாக நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவருக்கு ஆதரவளிப்பதில்லை என பெரும்பான்மை குழு தீர்மானித்துள்ளது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
AFP செய்தி முகவரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இருந்து அதிகாலையில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கு மத்தியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், இந்த விமானம் மாலைத்தீவில் உள்ள மாலே நோக்கிச் சென்றதாகவும், குறித்த விமானம் மாலைத்தீவு நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு தரையிரங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் எஞ்சிய காலப்பகுதிக்கு நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக பிரேரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவருக்கு ஆதரவளிப்பதில்லை என பெரும்பான்மை குழு தீர்மானித்துள்ளது.
கொட்டாவ பஸ் நிலையத்தில் எரிவாயு வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாவ பகுதியைச் சேர்ந்த ஜயதிஸ்ஸ பெரேரா (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதிலும், குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை முத்திரையிட மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து, ஜனாதிபதியும் அவரது மனைவியும் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாமில் இரவைக் கழித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஐபி முனையத்தினூடாக பயணிகளை வெளியேறுமாறு குடிவரவு அதிகாரிகள் முத்திரையிட மறுத்துள்ளதாகவும், ஆனால் சாதாரண விமானப் பயணத்திற்கு பயணிகள் முனையத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இருந்தாலும் எதிர்ப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி அவர்களுக்குத் தெரிவித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் தி ஹிந்து பத்திரிகை இன்று பிற்பகல் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இராஜதந்திர அதிகாரி ஒருவரிடம் வினவியதையடுத்து, தி ஹிந்து பத்திரிகை இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
எனினும் இதுகுறித்து அமெரிக்கா தூதரகம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.