பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மறுபிரவேசப் படமான பதான், ஜனவரி 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர். இதேபோல், ராஜ்குமார் ஹிரானியின் பன்கி படம் குறித்து அறிவிக்கப்பட்டது.
அப்படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி நிடிக்கிறார். இந்த படம் டிசம்பர் 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வாரம் ஷாருக்கான் அட்லி கூட்டணியுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ஜவான் குறித்து அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லாப் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 4000 ரூபாவை தாண்டும் என ஷுன்ரி லங்கா கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.
வற் வரி உட்பட பல வரிகள் அதிகரிக்கப்படுவதால் சீமெந்தின் விலை அதிகரிக்கும் என சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சிமென்ட் மூட்டையின் விலை ரூ.3,000 ஆக உயர்ந்துள்ளதாகவும், வரி அதிகரிப்பால் விலை கணிசமாக உயரும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரியவிற்கும் இடையில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் மற்றும் பாராளுமன்றத்தில் குழுக்களை மிகவும் திறம்பட செயல்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தணிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துத் பிரதமர் விளக்கமளித்தார். அந்த நடவடிக்கைகளுக்கு நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் தனது ஆசிர்வாதங்களை வழங்கும் என கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது அரசாங்கத்தின் பாரிய முன்னெடுப்பாக அமைய வேண்டுமென தமது அமைப்பு உறுதியாக நம்புவதாக ஜெயசூரிய மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, கலாநிதி சுஜாதா கமகே, சுனில் ஜயசேகர, ஹரேந்திர தசநாயக்க, ரிச்சர்ட் தனிப்புலஆராச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கு சலுகை அடிப்படையில் டீசல் வழங்குவதற்கு சீனா முன்வைத்துள்ள பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையின் அவசரத் தேவையாக மாறியுள்ள டீசலை வழங்குவதற்கான சீனாவின் யோசனைக்கு இலங்கை பதிலளிக்கவில்லை எனத் தெரியவந்துள்ள நிலையில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எரிபொருள் வழங்கும் சீனாவின் பிரேரணைக்கு இலங்கை பதிலளிக்காதது சீனாவிற்கு ஆச்சரியமளிப்பதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மட்டுப்படுத்தப்பட்ட டீசல் கையிருப்பு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி முன்னுரிமை பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரம் டீசல் விநியோகிக்கப்படும் என அதன் செயலாளர் கபில நாதுன்ன தெரிவித்தார்.
தற்போது தினசரி டீசல் விநியோகம் சுமார் 2500 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
நாட்டில் தற்போது சுமார் 40,000 மெட்ரிக் டன் டீசல் உள்ளது.
அடுத்த 09 அல்லது 10 நாட்களில் ஒரு கப்பல் வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அது நிச்சயமற்றதாகவே உள்ளது.
இந்தியாவின் உதவியுடன், அடுத்த டீசல் கப்பல் வரும் 16ம் திகதி வரும் வரை, தற்போதுள்ள டீசல் இருப்புகளை நிர்வகிக்க கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் சென்னையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையினை நிலைநாட்டும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியிருந்தார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு வருகை தந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
எனினும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி எவ்வித பதிலையும் இதுவரை வழங்கவில்லை.
எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ளப்பட்ட தேசிய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஜூன் 6 முதல் 10 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும் மற்றும் ஜூன் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 1 மணி நேரமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்ட நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்ததாகக் கூறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று (03) இரவு 9 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பதுளை, பந்துலுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு அருகில் உள்ள காணியில் வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.