web log free
July 01, 2025
kumar

kumar

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வெளிநாட்டு உதவிகளை நாடியுள்ள நிலையில், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நன்கொடையாளர் மாநாட்டை நடத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

"வரலாற்று நட்பு நாடுகளாக இருந்த இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவின் ஆதரவு எங்களுக்கு தேவை," என்று அவர் கூறினார்.

இந்தியாவின் உயர்மட்டக் குழுவொன்று இன்று புது தில்லியில் இருந்து கூடுதல் ஆதரவைப் பெறுவதற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் அமெரிக்க கருவூலத்திலிருந்து ஒரு சிறப்புக் குழு அடுத்த வாரம் விஜயம் செய்யும் என்று விக்கிரமசிங்க கூறினார்.

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருங்க பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக் கூடாது என்றார்.

எல்லாவற்றிற்கும் முன் தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

பிரேமச்சந்திர நேற்றைய தினம் பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட அவமானகரமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் அரசியல் விஷயமாக தனது இல்லத்திற்கு வந்திருப்பதாகவும், அது தொடர்பான சித்தாந்தத்தின் மூலம் அதைக் கையாள வேண்டும் என்றும் கூறினார். அவரது தாய்மையை அவமதிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்றார் அவர்.

கொழும்பு - கோட்டை மற்றும் தலங்கம பிரதேசங்களில் கடந்த மாதம் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரட்டா என அழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்ன உள்ளிட்ட 7 சந்தேகநபர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி ஊடாக மருதானை பொலிஸில் சரணடைந்த நிலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கமவில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 9 பேரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தனது மார்பகங்கள் வெளித் தெரிந்தது தொடர்பில் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஹிருணிக்கா பிரேமச்சந்திர, மூன்று பிள்ளைகளுக்கு பாலூட்டிய தனது மார்பகங்கள் குறித்து பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.

அவருடைய முகநூல் பதிவின் தமிழ் வடிவம் பின்வருமாறு, 

"எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்! அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன். 

(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன். 

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!"

- ஹிருணிகா பிரேமச்சந்திர  

பௌத்த சிங்கள மக்களே வாழந்திராத ஒரு பிரதேசத்தில் பௌத்தம் சார்ந்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுமானால், அதை ஒரு மரபுரிமைச் சின்னமாக பாதுகாப்பதே நியாயமானது. அதைவிடுத்து பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீளுருவாக்கம் செய்து வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

அநுராதபுரத்தில் திராவிட கலை மரபில் கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட சைவ ஆலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ் ஆலயங்கள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாக கருதப்பட்டனவேயொழிய அவை மீளுருவாக்கம் செய்யப்படவில்லை. அங்கு சைவ கோயில்கள் கட்டப்படவில்லை. பொலனறுவையில் 12 சைவ கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை புதுப்பிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட் தலைவர் த.சித்தார்த்தன்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர தமிழ் சமூகத்தை எச்சரிக்கை செய்து, பௌத்த சிங்கள மக்களிற்கும் எல்லையுண்டு, அந்த எல்லையை அவர்கள் தாண்டிவிடுவார்கள் என தெரிவித்திருந்தார்.

குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவை மீறி புத்தர் சிலையை நிறுவ முயற்சித்த போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் வினோநோகராதலிங்கம், செ.கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் க.சிவனேசன் தலைமையில் ஒரு போராட்டம் நடத்தி, அந்த முயற்சி நிறுத்தப்பட்டது. அதைப்பற்றித்தான் வீரசேகர அங்கு தெரிவித்துள்ளார்.

உண்மை நிலைமையை கூற வேண்டுமென்பதாலேயே, இன்றைய விவாதப் பொருளுக்கு வெளியில் சென்று அதை குறிப்பிடுகிறேன்.

சரத் வீரசேகரவின் பேச்சு ஆக்ரோசமாக இருந்தது. இப்படியான பேச்சுக்கள்தான் இன முறுகலை ஏற்படுத்தி, போரை கொண்டு வந்து, இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமான போர் ஏற்பட்டது என்பது அவருக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலைமையில் கூட வீரசேகரவின் உரை, இன, மத மோதலுக்கு வழிவகுக்கும்.

பௌத்த சிங்கள மக்களே வாழந்திராத ஒரு பிரதேசத்தில் பௌத்தம் சார்ந்த சின்னங்கள் கண்டுபிடிக்கப்படுமானால், அதை ஒரு மரபுரிமைச் சின்னமாக பாதுகாப்பதே நியாயமானது. அதைவிடுத்து பழைய பண்பாட்டுக்குரிய சின்னங்களை மீளுருவாக்கம் செய்து வழிபாட்டுத் தலங்களாக மாற்றுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

தொல்லியல் சட்டங்களையோ, நடைமுறைகளையோ பின்பற்றாமல் இவ்வாறு வழிபாட்டுத்தலங்ளை உருவாக்குவது, அங்கு திட்டமிட்டு பௌத்த, சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கான கால்கோள். இது இனங்களிடையே முரண்பாடுகளை வளர்த்து நாட்டை அழிவுகளுக்கு இட்டுச் செல்லுமேயொழிய, நாட்டை முன்னேற்றவோ ஐக்கியத்தை கட்டியெழுப்பவோ மாட்டாது.

அநுராதபுரத்தில் திராவிட கலை மரபில் கட்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட சைவ ஆலய இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ் ஆலயங்கள் தேசிய மரபுரிமைச் சின்னங்களாக கருதப்பட்டனவேயொழிய அவை மீளுருவாக்கம் செய்யப்படவில்லை. அங்கு சைவ கோயில்கள் கட்டப்படவில்லை. பொலனறுவையில் 12 சைவ கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவை புதுப்பிக்கப்படவில்லை. அவை தென்னிந்திய “மகாஜான” பௌத்த கலை மரபுக்குரியவை. இலங்கையின் மூத்த தொல்லியல் அறிஞர்களான பேராசிரியர் பரணவிதாரண, நந்தா விஐயசேகர,சேனக பண்டார போன்றவர்கள் வடக்கு, கிழக்கு இலங்கையில் காணப்படும் பௌத்த கட்டட கலை மரபுகள் தென்னிந்தியாவுக்குரியவை என சந்தேகத்திக்கிடமின்றி குறிப்பிட்டுள்ளனர்.

பாலி இலக்கியத்தில்கூட குருந்துமலை “குருந்தலூர்” என குறிப்பிடப்பட்டு அது தமிழ் மக்கள் சார்ந்த இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை காணலாம். 1815ல் அரச அதிகாரியான லூயிஸ் அவர்கள் தனது அறிக்கையொன்றில் குருந்தலூரில் இந்து ஆலயங்களின் இடிபாடுகளை நந்தியுடன் கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும் மத அடையாளமானது இனத்தின் அடையாளமாகாது. பௌத்தமதத்தின் தோற்றுவாய் இந்து சமயம் தான். இலங்கையில் பௌத்தம் ஆரம்பத்தில் தமிழர்களாலேயே பின்பற்றப்பட்டது என்பதற்கான சான்றாதாரங்கள் நிறையவுண்டு. பின்னர், சிங்கள பௌத்த நிலைப்பாடு காரணமாகவே பின்னர் அதில் மாற்றம் வந்தது. உலகில் பல நாடுகளில் பௌத்தம் பின்பற்றப்படுகிறது. அங்கெல்லாம் மொழியுடன் சேர்த்து பேசப்படுவதில்லை.

நாம் எந்த மததத்திற்கும்எதிரானவர்கள் அல்ல. எனது பெயரே அதற்கு சான்று.

தமிழ் மன்னர்களால் பௌத்த கோவில்களுக்கு வழங்கப்பட்ட பொருளுதவிகள் தொடர்பாக பல கல்வெட்டு குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல சிங்கள மன்னர்கள் சைவ கோயில்கள் கட்டியுள்ளனர். அவர்கள் மதத்தையும், மொழியையும் ஒன்றாக்கவில்லை.

இப்படியான காரணங்களினாலேயே கடந்த கால யுத்தம் ஏற்பட்டது. யுத்தத்தில் நாமும் சம்பந்தப்பட்டோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே வாழ வேண்டுமென இன்று நாம் நம்புகிறோம். அப்படியான நிலைமையை உருவாக்கினால்தான், இன்றைய விவாதப் பொருளான சுகாதார சேவைகள் நெருக்கடி பற்றிய பிரச்சனைகளை பேசு வேண்டிய தேவையிருக்காது.

இனியாவது அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்ட வாழ வேண்டும். இதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த நாட்டை ஆளும் தரப்புக்கள், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, அதை அங்கீகரிக்க வேண்டும்.

சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என பண்டாரகம பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களால் தலைவரிடம் கையளிக்கப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர். 

இலங்கையினால் வௌியிடப்பட்ட இறையாண்மை பத்திரத்தில் முதலீடு செய்த அமெரிக்க வங்கியொன்று தனது பணம் மற்றும் வட்டியை செலுத்துமாறு மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

ஹமில்டன் ரிசர்வ் வங்கியானது தங்கள் முதலீடு செய்த 257.5 மில்லியன் டொலர் மற்றும் முதலீட்டுக்கான வட்டியை செலுத்துமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையினால் வழங்கப்பட்ட 1 பில்லியன் டொலர் பெறுமதியான இறையாண்மைப் பத்திரம் அடுத்த மாதம் 25 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளது.

இலங்கை இதுவரை இரண்டு இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறியுள்ளதாக குறித்த வங்கி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி பொறுப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் சிலர் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தானும் தன் குழுவினரும் கடிதம் ஒன்றைக் கொடுப்பதற்காக அங்கு வந்ததாக ஹிருணிகா தெரிவித்துள்ளார். 

கொழும்பில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் ஆசனங்களையும் கூட்டுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இதன் முதல் கூட்டம் வரும் 24ம் திகதி அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக மஹர தேர்தல் தொகுதியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
 
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
 
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் தனது கன்னி சதத்தை பதிவு செய்த சரித் அசலங்க 110 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 60 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதன்படி, வெற்றி இலக்கான 259 என்ற ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 254 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
 
அவ்வணி சார்பில் அணித்தலைவர் டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பெட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
 
பந்து வீச்சில் தனஞ்ச டி சில்வா சாமிக்க கருணாரத்ன மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
 
30 வருடங்களின் பின் ஆஸி அணியை வீழ்த்தி தொடர் ஒன்றை இலங்கை கைப்பற்றும் சந்தர்பமாகவும் இது அமைந்துள்ளது. கடேசியாக அர்ஜுன ரணதுங்க தலைமையிலான அணியே ஆஸி அணியை வீழ்த்தி தொடர் ஒன்றை கைப்பற்றியிருந்தது.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd