பாகிஸ்தானில் கொடூரமாக படுகொலை செய்து எரிக்கப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும், 76 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் இன்று கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
எனவே பிரதமர் இல்லாமலேயே அமைச்சரவை பதவியேற்றுள்ளது.அதன் பின்னர் பதவியேற்ற அமைச்சர்கள் அனைவரும் பிரதமரை சந்தித்து பேசியுள்ளனர்.
இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த பிரதமர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளதாக நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் குறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
நீண்ட விடுமுறைக்கு பின் திங்கட்கிழமை முதல் பலர் பணிக்கு சென்றிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இன்று பிற்பகல் முதல் போராட்டக்காரர்கள் மீண்டும் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இப்போது செய்ய வேண்டியது, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதுதான் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவத்துவல தெரிவிக்கின்றார்.
அதற்கு பதிலாக மீண்டும் அமைச்சரவையை நியமிக்கும் செயற்திட்டத்தை திமிர்பிடித்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவர்களின் ஆணவ ஆட்சி தொடருமானால், லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட கதியே ராஜபக்சக்களுக்கும் ஏற்படும் என அவர் எச்சரித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு SJB விடுத்த அழைப்பை சாதகமாக பரிசீலிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 11 கட்சிகளின் கூட்டமைப்பும் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர நேற்று தெரிவித்தார்.
இன்றைய தினம் அநேகமாக புதிய அழைமச்சரவை நியமனம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது,நாட்டின் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தலைமையிலான புதிய அமைச்சரவையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் நீடிப்பார் எனவும் புது முகங்கள் பலர் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 15 மற்றும் 16ம் திகதிகளில் ஜனாதிபதி தலைலமையில் ஜனாதிபதி முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 15 முதல் 20 வரையில் பேணுவதற்கும் எஞ்சிய வெற்றிடத்தை ஏனைய கட்சிகளுக்கு வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, பவித்ரா வன்னியாரச்சி, பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சரவையில் பதவிகளை பெற்றுக்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.
ஏற்கனவே நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் நிதி அமைச்சர் தவிர்ந்த ஏனைய அமைச்சுப் பதவிகளிலும் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மக்கள் விரும்பினால் காபந்து அரசாங்கத்தின் தலைவராகி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் திறமை தனக்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே முன்னாள் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இளைஞர் சமூகத்தினரின் கோரிக்கைகளுக்கு இணங்கி அனைவரும் வெளியேற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் குறுகிய காலத்திற்கு காபந்து அரசாங்கத்தை தலைமை தாங்குவதற்கு தயார் என ரணில் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒன்றரை வருடங்களுக்குள் தீர்வு காண முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
லங்கா ஐஓசி நிறுவனம் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
அதன்படி பெற்றோல் ஒரு லீட்டர் மேலும் 35 ரூபாவினாலும் அனைத்து வகை டீசல் ஒரு லீட்டர் மேலும் 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.