web log free
December 21, 2024
kumar

kumar

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,000 கீழ் குறைக்கப்படும் என Litro Gas தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பிரதேசத்தில் விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த கிராம மக்கள் குழு ஒன்று விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு யுவதிகளையும் மற்றுமொருவரையும் கைது செய்து கொக்குவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

விபச்சார விடுதியை சோதனையிட்ட போது, அங்கிருந்த மேலும் இருவர் வீட்டின் பின்பகுதியில் இருந்து தப்பி ஓடியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த விபச்சார விடுதி தொடர்பில் கொக்குவில் பொலிஸாருக்கு பல தடவைகள் அறிவித்தும், பொலிஸார் விபச்சார விடுதி தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த விபச்சார விடுதி மட்டுமின்றி யாழ்ப்பாணம் குளப்பிட்டி சந்தி தொடக்கம் ஆனைகோட்டை பகுதி வரை வரிசையாக விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகவும் இதுவரையில் எந்தவொரு விபச்சார விடுதிக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

குளப்பிட்டி கிராம மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இரு யுவதிகளையும் மற்றைய நபரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

குறைக்கப்பட்ட மின் கட்டணம் போதாது என மின்வாரிய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

மின்சாரக் கட்டணத்தை 25 வீதத்தால் குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் 14.2% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

புதிய மின் கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 யூனிட்டுகளுக்கு இடைப்பட்ட மாதாந்திர நுகர்வு கொண்ட உள்நாட்டு வகை 65% குறைக்கப்பட்டுள்ளதுடன், அலகு கட்டணமும் 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு யூனிட் ஒன்றுக்கு 42 ரூபாவாக இருந்த மின் பாவனையாளர்களுக்கான கட்டணம் 31 ரூபாவாக 11 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டது.

61 முதல் 120 வரையான வீட்டு உபயோகப் பாவனையாளர்களுக்கு யூனிட் கட்டணம் 42 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைத்தொழில் துறைக்கு 9% மின்சாரக் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அது போதாது எனவும் அகில இலங்கை சிறு வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்த பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் அரசியலமைப்பு சபைக்கு மூன்று பெயர்களை பரிந்துரைப்பார் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சி.டி. விக்கிரமரத்ன இரண்டு சேவை நீடிப்புகளைப் பெற்ற பின்னர் ஐ.ஜி.பி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அடுத்த பொலிஸ் மா அதிபரின் சிரேஷ்ட நிலைபடி பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான நிலந்த ஜயவர்தன, எல்.எஸ்.பதிநாயக்க, தேஷ்பந்து தென்னகோன், பிரியந்த வீரசூரிய, பி.பி.எஸ்.எம் தர்மரத்ன ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

அந்த அறிக்கையின்படி, சிரேஷ்ட நிலைக்கு ஏற்ப மூன்று பெயர்களை ஜனாதிபதி தேர்ந்தெடுப்பார். 

அரசாங்கத்தில் பதவி வகிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைச்சர்கள் குழுவொன்று புதிய அரசியல் சக்தியொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் பல கேபினட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது. 

இந்த குழு கடந்த சில மாதங்களில் அவ்வப்போது கூடி புதிய வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர்  அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பேராசிரியர்  அதுல சேனாரத்ன,

“எதிர்காலத்தில் இதுபோன்ற அதிர்ச்சிகள் ஏற்படலாம். ஏற்படும் அதிர்ச்சிகளால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. இலங்கையில் இவ்வாறான அதிர்ச்சிகள் ஏற்படக்கூடிய பல பிரதேசங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

திருகோணமலையிலிருந்து உஸ்ஸங்கொடை வரையிலான செயலற்ற நிலத்தடி எல்லை. மற்றும் மத்திய மலைகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் அருகாமையில். சுனாமி போன்ற விபத்து ஏற்பட்டால் சுமத்ராவின் முனையில் நிலநடுக்கம் ஏற்பட்டால் நிச்சயம் சுனாமி அலைகளை அனுபவிக்க நேரிடும்.

ஆனால் சமீபகாலமாக அப்படியொரு நிலை ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், சமீபத்தில் அந்த பகுதியில் இதுபோன்ற பல அதிர்ச்சிகள் நடந்தன.

ஒன்றரை கோடி பெறுமதியான தங்கம் சுங்கத்தால் கைப்பற்றப்பட்டதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அழுத்தம் கொடுத்து அபராதம் கூட கொடுக்காமல் விடுவித்ததாக சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு குறிப்பிடுகின்றார்.

இணைய சேனலொன்றில் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதனை வஜிர அபேவர்தன மறுத்தாலும் அழுத்தம் காரணமாக எந்தப் பயனும் இல்லை என எழுத்து மூலம் கூறப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கின்றார்.

விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பொருட்களுக்கான 154 மில்லியன் ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக சுங்கப் பணிப்பாளர் குறைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. 

சட்டமூலத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் ஏழாவது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) முதல் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

2019/2020/2021 ஆண்டுகளில் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட உயர் தர பரீட்சைகளில் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.studentloans.mohe.gov.lk எனும்இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை அறிய 070-3555970 அல்லது 070-3555979 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொள்ள முடியும். 

இலங்கையில் இருந்து 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இதனால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன் அதிர்ச்சி கொழும்பு, காலி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd