web log free
November 20, 2025
kumar

kumar

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த இலக்கான பசுமைப் பொருளாதாரம் என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டார் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் ரம்புக்வெல்லவுக்கு பாரிய பங்கு இருக்கும் என அமரவீர தெரிவித்தார்.

இன்று (24) காலை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர், விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சை இணைத்தமை மிகவும் நல்ல விடயம் என மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரு நிறுவனமாகவும், விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களமும் ஒன்றிணைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிடகோட்டே - முப்பாலம் சந்திக்கு அருகில் ஆசிரியர்-அதிபரின் எதிர்ப்பு பேரணி கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மூலம் கலைக்கப்பட்டது.

பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் புத்ததாச மைதானத்திற்கு அருகில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், சாலை தடுப்புகளை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக முப்பாலம் சந்தியை சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

கொழும்பு, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள மத்திய தபால் நிலையத்திற்கு அருகில் வைத்து இருவர் கடத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தினால் பொதுஜன பெரமுன கவலையடைந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த முடிவு ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தவறான முடிவாகும் என்றார். 

“கெஹலிய அமைச்சர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அது எல்லாம் பொய் என்று மாறியது. ஆனால் இந்த விடயத்தில் சில மாற்றங்களைச் செய்வது நல்லது என ஜனாதிபதி தீர்மானித்திருக்கலாம். அதன்படி, மருத்துவராக இருக்கும் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், எங்களுக்கு சில கவலைகள் உள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தினோம். ஏனெனில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை வழிநடத்தும் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு வழங்குகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த ஆற்றலை வழங்குகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 5 பேர் மாத்திரமே உள்ளனர். ஆனால் இங்கிருந்து ஒரு அமைச்சுப் பதவி நீக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய அரச அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. அது தவறு. தவறை தவறு என்று சொல்ல நாங்கள் பயப்படுவதில்லை. ஜனாதிபதி கூட தவறு செய்தால் தவறுதான். ஜனாதிபதி அவ்வாறு செய்திருக்கக் கூடாது. இதற்கு கட்சியாக நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்றார்.

இலங்கைக்கு வரும் 07 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் வீசா இன்றி நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய 07 நாடுகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வருகை தருவதாக தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைகளால் ஏழு நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரும்போது இலவசமாக விசாவைப் பெற முடியும்.

ஆட்சியை தொடர்வதற்கு அரசாங்கம் ஆதரவளிக்காது போனால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டதாக ஜனாதிபதிக்கு பொஹொட்டுவ தலைமை அறிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மக்களின் பணத்தை வீணடிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி கடுமையாக வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட அமைச்சு மாற்றத்தில் வீச்சு மாற்றமே தவிர புதிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், புதிய அமைச்சுப் பதவிகளை வழங்கி மக்களை சுமை ஏற்ற தாம் தயாரில்லை எனவும் அவர் பொஹொட்டுவவிடம் தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் முன்னோடித் திட்டம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தயாராகி வருகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இ.தொ.கா வலியுறுத்தியுள்ளது.

தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இ.தொ.கா, நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டே தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தோட்ட தொழிலாளர்கள் வருடம் முழுவதும் கம்பனிக்கு வருவாய் ஈட்டி கொடுக்கும் வகையில் கடினமாக உழைக்கின்றனர்.

அவர்கள் வருடத்தில் தைப்பொங்கல்,தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை கொண்டாடிவரும் நிலையில், வருடம் முழுவதும் கம்பனிக்காக உழைக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் இவ்விடயத்தில் இ.தொ.கா பின்வாங்காது எனவும் தெரிவித்துள்ளது.

தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்குவது குறித்து இன்றைய தினம் அறிவிப்பதாக கம்பெனிகள் தெரிவித்துள்ளன. 

சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

இதன்படி விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் பதவி மகிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர், விவசாய அமைச்சராக மகிந்த அமரவீரவும், சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் பணியாற்றினர்.

இதேவேளை, சுகாதார அமைச்சராக டொக்டர் ரொமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டார். 

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டமையே இதற்குக் காரணம்.

ரயில்கள் ஒரு பாதையில் மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் செயற்பாட்டு அத்தியட்சகர் எம்.ஜே.இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.

இதனால் அனைத்து ரயில் பயணங்களும் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக நேரிடும் என்று அவர் கூறுகிறார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd