புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தராதங்களை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
காலவாதியாகிப்போன சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த புதிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைத்து அதனை நீக்கப்போவதாக ஜனாதிபதியும் அரசாங்கமும் வெளியிட்டுள்ள கருத்துக்களை நாங்கள் வரவேற்கின்றோம் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்தும் போது அனைத்து பங்குதாரர்களுடனும் நேர்மையான வலுவான கலந்தாலோசனைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏனெனில் இது அவ்வாறான சட்டம் எனவும் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தருணம் ஆகவே அரசாங்கம் பல்வேறு தரப்பட்ட பங்குதாரர்களின் கருத்துக்களை செவிமடுப்பதற்கு நேரத்தை செலவிடும் என நாங்கள் கருதுகின்றோம், எனவும் தெரிவித்துள்ள அவர் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தராதரங்களை பூர்த்தி செய்வதாகவும் இலங்கை மக்களின் தேவைகளை உண்மையில் பூர்த்தி செய்வதாகவும் காணப்படவேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டின் இறுதிக்குள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வலுவான தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், புதிய தலைவரை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக உள்ளார்.
இலங்கையின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு மார்ச் மாதத்தில் 7.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், அன்னிய சொத்துகளின் கையிருப்பும் மார்ச் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டின் உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு பெப்ரவரியில் சுமார் 28 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட நிலையில், மார்ச்சில் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
பெப்ரவரியில் 2,219 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு சொத்து கையிருப்பு மார்ச் மாதத்தில் 2,691 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த மாதம் 20.3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மார்ச் மாதத்தில் 2,184 மில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2,628 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
புத்தாண்டுக்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சில உறுப்பினர்கள் அரசாங்கத்திற்குச் செல்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
புத்தாண்டுக்குப் பின்னர் அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எம்பிக்கள் செல்வது சாத்தியமா என கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
"கட்சித் தாவல்களை நாங்கள் மறுக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஒரு சில உறுப்பினர்கள் மாறி செல்வார்கள், ”என்று அவர் இது கூறினார்.
தற்போதைய ஜனாதிபதி விக்ரமசிங்கவைப் புகழ்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவைப் பற்றி குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு எப்பொழுதும் ஆதரவு வழங்கவும் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்ளவும் ராஜித எண்ணம் கொண்டிருந்தார்.
“ஜனாதிபதி விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் எண்ணம் ராஜிதவுக்கு எப்போதும் இருந்தது. கடந்த காலங்களில் அவர் பலமுறை கட்சித்தாவி உள்ளதால் , கடப்பது அவருக்கு பெரிய விஷயமல்ல, ”என்று நளின் கூறினார்.
2023 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளால் கருத்தடை சத்திரசிகிச்சை உள்ளிட்ட குடும்பக்கட்டுப்பாடுகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபர அறிக்கையின்படி இத்தகவல் உறுதி செய்யப்பட்டது.
அந்தத் தரவுகளின்படி, இலங்கையில் 225,492 பேர் கொண்ட குழு 2021 இல் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்துள்ளது. அவர்களில் 29,993 பேர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில் 96,963 பேர் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். 09 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிக எண்ணிக்கையிலான கருத்தடை அறுவை சிகிச்சைகள் 2021 இல் நடந்தன. இதற்கு முன், 2012ல் தான் அதிக எண்ணிக்கையிலான கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அது 21,109 ஆகும்.
2021 ஆம் ஆண்டில், குடும்பக் கட்டுப்பாடு அமைப்பின் கீழ் 28,531 பெண்கள் கண்ணி(worn loops) அணிந்துள்ளனர். 44,462 பெண்கள் வாய்வழி கருத்தடைகளைப் பயன்படுத்தியுள்ளனர். 79,622 பெண்கள் தடுப்பூசிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவ தொடகமுவ பாலத்திற்கு அருகில் உள்ள மொலபு ஓயா கால்வாயில் ரஷ்ய பெண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ரஷ்ய பெண்மணி 35 வயதுடையவர் எனவும் அவர் மொலபு ஓயாவிற்கு அருகிலுள்ள வில்லா ஒன்றில் தனியாக வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் மூன்றரை மாதங்களுக்கு முன்னர் குறித்த ரஷ்யப் பெண் இந்நாட்டிற்கு வந்திருந்த நிலையில், அவரது சடலம் ஓடையில் மிதப்பதைக் கண்ட மீனவர் ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
காலி பதில் நீதவான் லலித் பத்திரனவின் உத்தரவின் பிரகாரம் உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் ஹிக்கடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய அதிக வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய வேலைகளை இலக்காகக் கொண்ட பயிற்சி நிலையங்களை நிறுவுவது தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்த போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.
தாதியர் துறையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நாட்களின் எண்ணிக்கை மற்றும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அதிகமான தொழிலாளர்கள் ஜப்பானிய வேலை வாய்ப்புகளை திறக்க முடியும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
இதன்படி வேலை தேடுபவர்களுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஜப்பானிய தொழிலாளர் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சேனாரத்ன விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்படுவார் என வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (11) கூடவுள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் இரு தினங்களில் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.