கண்டி தலைமையக பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கி கழுத்திலிருந்த தங்க நகையை உடைத்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருடப்பட்ட நகையின் பெறுமதி சுமார் இரண்டு இலட்சம் ரூபா எனவும் சந்தேகநபர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் சார்ஜன்ட் தனது மனைவியுடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, பயணக் கட்டணம் தொடர்பான வாக்குவாதத்தில் முச்சக்கரவண்டி சாரதி பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி அவரது தங்கச் சங்கிலியை உடைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீர் விநியோக குழாய் உடைப்பு காரணமாக கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 1 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு நீர் விநியோகம் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது
ஒரு கர்ப்பிணி தாய் பாஸ்போர்ட் வரிசையில் குழந்தை பெற்றெடுத்தார்.பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்தில் இன்று அதிகாலை ஹட்டன் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு நேர்ந்துள்ளது.அவர் வரிசையில் பிரசவ வலியில் இருந்தபோது, ராணுவ வீரர்கள் அவரை காசில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் ஏற்கனவே குழந்தை பிறந்து தற்போது குழந்தை மற்றும் தாயும் நலமாக உள்ளனர்.
இலங்கையில் அரசாங்கத்திற்கெதிராக நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி மக்களை போராட்ட பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில்,நேற்றைய தினம் கொழும்பில் அரசாங்கத்திற்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் பொது மக்கள் ஒன்றுக்கூடாத சில பொது வீதிகளில், பொது போக்குவரத்து அமைதியாக இடம்பெறும் பகுதிகளில் தேவையற்ற வகையில்,கண்ணீர்புகை குண்டுகளை வீசி பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன், பொது மக்கள் பொலிஸாருக்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
ஓல்கொட் மாவத்தை மற்றும் கோட்டையைச் சுற்றியுள்ள ஏனைய இடங்களில் தங்கி பெடகொடு பிரதேச மக்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்கும் வகையில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த பகுதியில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிக்குகள் உள்ளிட்ட பல அமைப்புகளின் தலைவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எரிபொருள் வழங்குவதற்காக இந்தியா முன்பணத்தை கோரியுள்ளதாக புளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பெறுவதற்காக இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடன் வசதி முடிவடைந்ததை அடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு இல்லாத காரணத்தினால், இலங்கைக்கு மேலும் எரிபொருள் கடனை வழங்குவதை இந்தியா இடைநிறுத்தியுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
செலுத்த வேண்டிய பல எரிபொருள் கப்பல்களை பணம் செலுத்தும் வரை தடுத்து வைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திச் சேவை கூறுகிறது.
எவ்வாறாயினும், இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக கூறப்படும் அடுத்த நான்கு எரிபொருள் தாங்கிகள் முன்பணத்தை உறுதிப்படுத்துவதற்காக காத்திருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது அடுத்த உணவு தொடர்பில் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை காட்டுகிறது.
அறிக்கையின்படி, 6.26 மில்லியன் இலங்கையர்கள் அல்லது ஒவ்வொரு 10 குடும்பங்களில் மூன்று பேர் தங்களுக்கு அடுத்த உணவு கிடைக்குமா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.
உணவுப் பணவீக்கம் பாரியளவில் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் 61% பேர் ஏற்கனவே உணவு உட்கொள்வதைக் குறைத்து, சத்தான உணவை உட்கொள்வதைக் குறைத்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
அறிக்கையின்படி, சுமார் 200,000 குடும்பங்கள் தற்போது ஆபத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்
வட்டி விகிதங்களை மேலும் அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) தலா 100 அடிப்படை புள்ளிகளால் முறையே 14.5% மற்றும் 15.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சட்டப்பூர்வ கையிருப்பு விகிதத்தை தற்போதைய 4.00% அளவில் பராமரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்க்க கடன் நிவாரண நிதியில் இருந்து எரிபொருளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது வெற்றிகரமான தொலைபேசி உரையாடல் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான Aeroflot விமான சேவையை மீள ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.